வடக்குத்து அண்ணாகிராமம் பெரியார் படிப்பகத்தில் கழக மகளிரணி கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 20, 2022

வடக்குத்து அண்ணாகிராமம் பெரியார் படிப்பகத்தில் கழக மகளிரணி கருத்தரங்கம்

வடக்குத்து, ஜன. 20- கடலூர் மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மற்றும் பொங்கல் விழா கருத்தரங்கம் 14.1.2022 அன்று மாவை 6 மணி அளவில் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் மண் டல மகளிர் அணி செயலாளர் ரமா பிரபா தலைமையில், மாவட்ட மகளிர் அணி தலைவர் முனியம்மாள் முன்னி லையில் நடைபெற்றது.

மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை நிர்வாகிகள் குணசுந்தரி, சத்தியவதி, விஜயா திராவிடமணி, கலைச்செல்வி, திலகவதி தண்டபாணி ஆகியோர் மகளிர் உரிமை தமிழர் திருநாள் சிறப்பு பற்றி உரையாற்றினர்.

கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு திராவிடர் திருநாள் சிறப்புகள் பற்றி எழுச்சி உரை ஆற் றினார். மாவட்ட அமைப்பாளர் மணி வேல், மண்டல இளைஞரணி செயலா ளர் பஞ்சமூர்த்தி, மாவட்ட இளைஞ ரணி செயலாளர் வேலு, அமைப்பாளர் ராமநாதன், மாவட்ட மாணவர் கழக தலைவர் ஆண்டனி, பெரியார் வீர விளையாட்டுக் கழக தலைவர் மாணிக்க வேல், பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, கிளைத் தலைவர் பாஸ்கர், செயலாளர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். கழக மகளிர் அணித் தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment