கரோனா இப்போது முடிவுக்கு வராது உலக சுகாதார அமைப்பு திட்டவட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 21, 2022

கரோனா இப்போது முடிவுக்கு வராது உலக சுகாதார அமைப்பு திட்டவட்டம்

ஜெனீவா, ஜன. 21-  உலக சுகா தார அமைப்பின் தலை வர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவா வில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கரோனா வைரஸ் பெருந்தொற்று இப்போ தைக்கு முடிவுக்கு வராது. ஒமைக்ரானுக்கு பிறகும் புதிய தொற்றுகள் வர வாய்ப்பு உள்ளது.

ஒமைக்ரான் வேண்டு மானால் தீவிரம் குறைந் ததாக இருக்கலாம். ஆனால் இது லேசான நோய் என்று சொல்வது தவறாக வழிநடத்துகிறது. ஒமைக்ரானும் மருத்துவ மனைகளில் நோயாளி கள் சேர்க்கைக்கு காரண மாகிறது. உயிரிழப்புக ளையும் ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் இன்னும் தீவிரமாக பரவி வருகிறது. பலர் இன்னும் பாதிக்கப் படக்கூடியவர்கள். இவ் வாறு அவர் கூறினார்.

இதற்கு மத்தியில் கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக உலக பொருளாதார மன்றத் தில் அமெரிக்க தொற்று நோய் நிபுணர் ஆண்டனி பாசி பேசினார். அப் போது அவர், “கரோனா தொற்றின் முதல் கட்டத் தில் உலகம் இன்னும் உள் ளது. உலகம் முழுவதும் உண்மையில் மிகவும் எதிர்மறையாக பாதிக்கப் பட்டுள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, “ஒமைக் ரான் தொற்றை பொறுத் தமட்டில் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியில் ஒரு அர்த்தமுள்ள விளைவை ஏற்படுத்த முடியும். ஒமைக் ரான் கரோனாவுக்கான நேரடி தடுப்பூசியாக இருக்கப்போகிறதா என்றால் இது ஒரு திறந்த கேள்வி. ஏனென்றால் புதிய உருமாற்றங்கள் வெளி வருகின்றன” எனவும் கூறி னார். எனவே “கரோனா பெருந்தொற்று எப் போது முடிவுக்கு வரும் என்பதை இப்போதே கணித்து கூறி விட முடி யாது” என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment