தியாகராயர்நகர் “ஸ்மார்ட் சிட்டி” விவகாரத்தில், அ.தி.மு.க. அரசின் கோளாறு குறித்து விசாரணை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

தியாகராயர்நகர் “ஸ்மார்ட் சிட்டி” விவகாரத்தில், அ.தி.மு.க. அரசின் கோளாறு குறித்து விசாரணை!

பேரவையில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஜன. 7 - தியாகராயர்நகர்ஸ்மார்ட் சிட்டிவிவகாரத்தில், .தி. மு.. ஆட்சியில் நடைபெற்ற கோளாறு குறித்து விசா ரணைக்குழு அமைத்து விசாரிக் கப்படும் என்று பேரவையில், எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமி பேசுகை யில் குறுக்கிட்டு  முதல மைச்சர் மு..ஸ்டாலின் தெரிவித்தார். இது குறித்து அவரது உரை வருமாறு:

தூர்வாராத பிரச்சினை பற்றி நான் சொல்ல வேண்டுமென்று சொன்னால், உங்களுடைய ஆட்சிக் காலத்தில்ஸ்மார்ட் சிட்டிஎன்ற ஒரு திட்டத் தினை அறிவித்து, அதை தியாகராயர் நகர் பகுதியில் சென்னை மாநகராட் சியைப் பொறுத்தவரையில் முதற்கட்ட மாக அந்தப் பகுதியில் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

உங்களது ஆட்சிக் காலத்தில். இந்த ஸ்மார்ட்சிட்டி திட்டத்தினை நிறை வேற்றும் நேரத்தில் அந்தக் கால்வாய் பகுதிகளை உடைத்து விட்டு, மாம்பலம் கால்வாய்க்கு - பெரும்பாலும் சென்னை யில் மழை பெய்யும் காலத்தில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும். ஆனால், தியாகராயர் நகர் பகுதியில் பல வருடங்களாக தண்ணீர் தேங்கி நிற்கவில்லை.

காரணம், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்தபோது, நான் ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தபோது, தியாகராயர் நகர் பகுதிக்கு, மாம்பலம் கால்வாயை சுத்தப்படுத்திக் கொடுத்து, அவற்றை ஒழுங்கு படுத்தி, சரிசெய்து வைத்திருந்தோம். அதனால், தியாக ராயர் நகர் பகுதியில் எவ்வளவு மழை பெய்தாலும், இன்னும்கூட செம்பரம் பாக்கம் ஏரியைத் திறந்துவிட்ட போது கூட தியாகராயர் நகர் பகுதியில் அதிகமாக தண்ணீர் தேங்கவில்லை.

ஆனால், சென்னையில் பல இடங் களில் தண்ணீர் தேங்கியது. ஆனால், இப்போது தியாகராயர் நகர் பகுதி யிலும் தண்ணீர் தேங்கி நின்றது. தற்போது பெய்த மழையில். அதற்கு என்ன காரணம் என்று கேட்டீர்கள் என்று சொன்னால், அங்கிருந்த மழைநீர் வடிகால்  (Storm Water drainage)  எல்லாம் அடைத்து, அந்த (Smart City) களை உயர்த்தி, (Platform) உருவாக்கிய காலத்தில் அதனைப்பற்றி கவனிக்காமல் செய்த காரணத்தினால்தான் அங்கு கிட்டத்தட்ட - சென்னையில் ஒரே நாளில், இரண்டு நாட்களில் தண் ணீர் தேங்கியதையெல்லாம் அப்புறப் படுத்திவிட்டோம்.

ஆனால், தியாகராயர் நகர் பகுதி யில் தண்ணீரை அப்புறப்படுத்துவ தற்கு ஒரு வார காலம் ஆகியது. அதற்குக் காரணம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், அது நீங்கள் செய்த கோளாறு. எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஏதோ ஒப்பந்தம் விட்டோம், அதில் நிதி வந்தது, அதை வைத்து செலவு செய்தோம்... அதற்கு என்ன கணக்கு என்று அதற்கு ஒரு விசாரணைக் குழு போடப் போகிறோம். அதுவும் நடக்கப் போகிறது.

ஸ்மார்ட் சிட்டி'' அமைக்கும்போது என்னென்ன விதிமுறைகள் இருக் கின்றதோ அந்த விதிமுறைகளையெல் லாம் மீறி அந்த (Smart City) யை நீங்கள் உருவாக்கிய காரணத்தினால்தான் தியாகராயர் நகர் பகுதியில் இந்த நிலை ஏற்பட்டது. அதையும் எதிர்க்கட்சித் தலைவர் கவனத்திற்கு கொண்டு வரு கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர்

 மு.. ஸ்டாலின் அறிவித்தார்.

No comments:

Post a Comment