குழந்தைகளுக்கான திருத்தப்பட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 25, 2022

குழந்தைகளுக்கான திருத்தப்பட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

புதுடில்லி, ஜன.25  குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கான திருத்தப்பட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறை களை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள திருத்தப் பட்ட வழிகாட்டு நெறி முறை தொடர்பான அறிக்கையில் கூறியிருப் பதாவது:

5 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு முகக் கவசம் தேவையில்லை. மேலும், 6 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் நேரடி மேற்பார்வையில் முகக் கவசம் அணிய லாம். 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், பெரியவர் களைப் போல முகக் கவசம் அணிய வேண்டும்.

அறிகுறியற்ற, லேசான பாதிப்புகளுக்கு சிகிச்சை அல்லது நோய் தடுப்புக்கு நுண்ணுயிர் எதிர்ப்பி களை (ஆன்டிபயாடிக்ஸ்) மருத்துவர்கள் பரிந்து ரைக்கக் கூடாது.

மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட குழந் தைகளுக்கு ரத்தம் உறைதல் ஏற்படும் அபாயத் தைக் கண்காணிக்க வேண்டும். லேசானதொற்றில் பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கு வழக்கமான குழந்தை பராமரிப்பு, ஊட்டச்சத்து மற்றும் உளவியல் ஆலோச னையை வழங்க வேண்டும்

மற்ற நாடுகளில் ஏற் பட்ட கரோனா வைரஸ் பாதிப்பு மூலம் ஒமைக் ரான் குறைவான தாக் கத்தையே ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது.

நமது அரசுக்குக் கிடைத்த தகவலின்படி தற்போது ஒமைக்ரான் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவசியமான தேவைகள் இருக்கும் பட்சத்தில் ஆன்டிபயா டிக்ஸ், ஆன்டிமைக் ரோபயல்ஸ் மருந்துகளை கொடுக்கலாம்.

ஸ்டெராய்டுமைல்ட் அல்லது அறிகுறிகள் அற்ற குழந்தைகளுக்கு ஸ்டெராய்டு மருந்து களை கொடுக்கக் கூடாது. இது ஆபத்தை ஏற்படுத் தலாம். அதே சமயம் மருத்துவமனையில் தீவிர மான கரோனாவோடு அனுமதிக்கப்பட்டு இருப் பவர்களுக்கு கண்காணிப் புக்கு பின்புதான் ஸ்டெ ராய்டு மருந்துகளை கொடுக்க வேண்டும்.

சரியான நேரத்தில், சரியான அளவில், சரி யான காலகட்டத்துக்கு மட்டுமே ஸ்டெராய்டு மருந்துகளை கொடுக்க வேண்டும்.

தீவிர நோயாளிகளுக்கு 5-7 நாள்களுக்கு ஸ்டெராய்டு மருந்துகளை கொடுக்கலாம்.

இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment