இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவிகிதம் சரிவு : ஆய்வில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 25, 2022

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவிகிதம் சரிவு : ஆய்வில் தகவல்

மும்பை, ஜன.25 இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவீதம் சரிந்துள்ள தாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

ஏழை இந்தியக் குடும்பங்களின் ஆண்டு வருமானம், 2015-2016-இல் இருந்த நிலையை விட அடுத்த அய்ந்து ஆண்டு காலத்தில் அதா வது, 2020-- 2021  ஆம் ஆண்டில் கரோனா  பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக 53% சரிந்துள்ளது. இதே அய்ந்தாண்டு காலக்கட்டத்தில் 20% பணக்காரர்கள் தங்களின் ஆண்டு குடும்ப வருமானத்தில் 39% வளர்ச்சி கண்டுள்ளனர் என்பது இந்தியாவின் நுகர்வோர் பொருளா தாரம் என்ற மும்பையைத் தள மாகக் கொண்ட குழுவால் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

வருமானத்தின் அடிப்படையில் மக்கள் தொகையை  அய்ந்து வகை களாகப் பிரித்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந் தியாவின் மிக ஏழ்மையான 20 சதவீத குடும் பங்களின் வருமானம் 53 சதவீதம் சரிந்துள்ளது. மேலும் எனப் படும் கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்தினரின் குடும்ப வருமானம் இதே காலகட்டத்தில் 39 சதவீதம் சரிந்துள்ளது. நடுத்தர வர்க்க மக்களின் ஆண்டு வருமானம்  9  சதவீதம்  குறைந்துள்ளது.

இருப்பினும், உயர் நடுத்தர வர்க்கம் மற்றும் பணக்கார குடும்பங்களின் வருமானம் முறையே 7 சதவீதம் மற்றும் 39 சதவீதம் என்ற அளவில் இந்த அய்ந்தாண்டு கால கட்டத்தில் உயர்ந்துள்ளது. தாராளமயமாக்கலுக்கு முந்தைய அய்ந்தாண்டு காலத்தை விட, கடந்த அய்ந்து ஆண்டுகளில் 20% பணக்கார குடும்பங்கள் அதிக வரு மானம் ஈட்டி யுள்ளனர்.

1995 ஆண்டு வாக்கில் மொத்த குடும்ப வரு மானத்தில் 50.2 சதவீதத்தை பணக்காரர்களான 20 சதவீ தத்தினர் பெற்றிருந்தனர். அதுவே 2021-இல் 56.3  சதவீதமாக உயர்ந்துள் ளது என்று கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இதற்கு நேர்மாறாக, 20 சதவீத ஏழை மக்களின் மொத்த குடும்ப வரு மானத்தின் பங்கு 5.9 சதவீதத்தில் இருந்து 3.3 சதவீத மாகக் குறைந்துள்ளது. குறிப் பாக, 2021-இல், கரோனா கார ணமாக ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு காரணமாக இந்த 20 சதவீத ஏழை மக்கள் 2016-இல் வருமானம் ஈட்டியதில் பாதி அளவு மட்டுமே தற்போது வருமானம் ஈட்டியுள் ளனர் என்றும் அந்த கணக் கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நகரங்களில் ஏழைக் குடும்பங்களின் எண்ணிக் கையில் உயர்வு: 2016-ஆம் ஆண்டில் 20 சதவீத ஏழைகளில் 90 சதவீதம் பேர் கிராமப் புறங்களில் வாழ்ந்துள் ளனர். 2021-இல் இந்த எண்ணிக்கை 70 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதே நேரம் நகர்ப் புறங்களில் வசித்து வந்த ஏழை மக்களின் எண் ணிக்கை 2016-இல் 10 சதவீதம் என்ற அளவில் இருந்து 2021-இல் 30 சதவீதமாக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment