கேட்பவன் கேனயனாக இருந்தால் எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டுமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

கேட்பவன் கேனயனாக இருந்தால் எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டுமாம்!

மின்சாரம்

காமகேடி

கேள்வி: கடவுளைக் கும்பிடுபவன் பக்தன். கடவுள் இல்லை என்பவனை என்னவென்று அழைக்கலாம்?

பதில்: ‘சாமிஎன்று அழைக்கலாம். அது .வெ.ராமசாமி நாயக்கரின் சுருக்கம்.

- ‘துக்ளக்‘, 8.12.2021

கேள்வி: கடவுளுக்குப் பூஜை செய்பவன் அர்ச்சகன். கர்ப்பக் கிரகத்தை சல்லாப லீலைகளுக்குப் பயன்படுத்துபவனை என்ன என்று அழைக்கலாம்!

பதில்: காம கேடி என்று அழைக்கலாம்.

* * *

கேள்வி: பள்ளி, கல்லூரிகளில் பெண்கள் நிம்மதியாகப் படிக்க முடியாமல் காமப் பிசாசுகள் அவர்களைத் துரத்திக் கொண்டே வருகிறதே?

பதில்: அந்தக் காமப் பிசாசுகளும் நம் நாட்டில் உருவாகும் இளைஞர்கள், மனிதர்கள்தான். அதை வீடுகளில் மனிதர்களாக்கவில்லை என்றால் தெருவில் காமப்பிசாசுகளாகத்தான் சுற்றும். குடும்பக் கலாச்சாரக் கேந்திரமாக வீடு இருந்தால் காமப் பிசாசுகள் உருவாகாது - திராவிட இயக்கங்கள் தான் குடும்பக் கலாச்சாரத்தை அழித்தன.

- ‘துக்ளக்‘, 8.12.2021

கடவுள்களே கற்பழித்தனர் என்றும், அதனால் சாபம் ஏற்றனர் என்றும் எழுதி வைத்த மதத்தைப் பின்பற்றி, பக்தியோடு அந்தக் கடவுள்களைக் கும்பிடுவதில் ஆரம்பித்த பலன் மடத்துக்கு வந்த பெண் எழுத்தாளரையே கையைப் பிடித்து இழுக்கும் அளவுக்குப் பிசாசுகள் பெருகி விட்ட நாட்டில் என்னதான் நடக்காது?

இதற்குப் பெயர்தான் பார்ப்பனக் கலாச்சாரம் என்பது!

* * *

கேள்வி: காணாமல் போன ஏரியை மீட்க முடியாது. இருக்கிற ஏரியைக் காக்க வேண்டும் என்று வைரமுத்து பேசுவது நகைச்சுவையாக இருக்கிறதே!

பதில்: காணாமல் போன நுங்கம்பாக்கம் ஏரிதான் இன்று வள்ளுவர் கோட்டமாக இருக்கிறது (‘துக்ளக்கேள்வி பதில் 1.12.2021) காணாமல் போன ஏரியை மீட்க முடியாது என்று வைரமுத்து கூறுவதில் நியாயம் இல்லாவிட்டாலும், யதார்த்தம் இருக்கிறது. வள்ளுவர் கோட்டமா, ஏரியா என்பது கடினமான சாய்ஸ்.

- ‘துக்ளக்‘, 8.12.2021

காணாமல் போன தாராதேவி கோயில்தான் காஞ்சி காமாட்சியம்மனாக இருக்கிறது.

காணாமல் போன புத்தன்தான் இப்பொழுது திருப்பதி ஏழுமலையானாக இருக்கிறான்.

காணாமல் போன புத்தன்தான் விநாயகனாக இருக்கிறான் (புத்தனுக்கு விநாயகன் - தமையன் என்று பெயர்).

காணாமல் போன திறந்தவெளி சிறைக்கான இடம்தான் வல்லம் சாஸ்திரா பொறியியல் கல்லூரியாகவும் இருக்கிறது, என்ன செய்யலாம்?

* * *

கேள்வி: ஹிந்து மதம் குறித்தபெரியவாளின் அருளுரையை, 130 கோடிப் பேரும் அகப் பதிவு செய்தால் அமைதி வரும் அல்லவா?

பதில்: அமைதியைத் தேடுபவர்களுக்குத்தான் அமைதி கிடைக்கும். அமைதியை யார் மீதும் திணிக்க முடியாது. ஹிந்து மதம் பற்றிய பெரியவரின் அருளுரையை 130 கோடி மக்கள் மீது திணிப்பதால் அவர்களுக்கு அமைதி வராது - அமைதி வேண்டுபவர்கள் விரும்பிப் படித்தால் தான் அமைதி வரும். பகவத் கீதையில் கிருஷ்ணன், ஒருவர் ஆன்மிகத்தைத் தானாகத் தேடிப் போக வேண்டும் என்று கூறுகிறார்.

(கீதை பகுதி 4, ஸ்லோகம் 34)

நாஸ்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே என்று காஞ்சிப் பெரியவால் கூறுகிறது. இது எத்தகைய மனிதக் குரூரம்? இவர் கூறுவதற்குப் பெயர்தான் அருளுரையாம்.

போதும் போதாதற்குப் பகவத் கீதையை எடுத்துக் கூறுவதுதான் நகை முரண்!

எதிரே நிற்கும் பந்துக்கள் மீது போர் தொடுக்கத் தயங்கும் அர்ச்சுனனிடம் போர் தொடு - எதிரிகளைக் கொல்லு என்று கிருஷ்ணன் கூறுவதற்குப் பெயர் கீதா உபதேசமாம். அமைதி திரும்புவதற்கான வழி முறையாம்.

காந்தியாரைப் படுகொலை செய்த பச்சைப் பார்ப்பான் நாதுராம் கோட்சே கூட காந்தியாரைக் கொன்றதற்குப் பகவத் கீதை சுலோகத்தை எடுத்துக் காட்டித்தான் நீதிமன்றத்தில் தன் பக்கத்தில் நியாயம் இருக்கிறது என்று சொல்லவில்லையா?

கேட்பவன் கேனயனாக இருந்தால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டும்என்பானாம்.

மொட்டையாண்டிக்குப் பெயர் சவுரிராஜன்என்று பெயர் சூட்டுவதில்லையா?

No comments:

Post a Comment