நீதிமன்றத்தில் கீதையை எடுத்துக் காட்டிய கோட்சே - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

நீதிமன்றத்தில் கீதையை எடுத்துக் காட்டிய கோட்சே

மக்கள் என்னை அறிவில்லாதவன் என்றோ முட்டாள் என்றோ அழைக்கலாம். ஆனால், வலிமையானதாகத் தேசம் உரு வாவதற்குத் தேவையென நான் நினைக் கின்ற அறிவார்ந்த வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு உரிய உரிமை கிடைத்து விடும். இதைப்பற்றி யெல்லாம் முழுமையாக எண்ணியபிறகு நான் இறுதியாக முடிவெடுத் தேன்; ஆனால், எனது முடிவைப் பற்றி நான் யாரிடமும் பேசவில்லை. என் இருகைகளிலும் துணிச்சலைத் தேக்கினேன்; பிர்லா மாளிகை யில், பிரார்த்தனைத் திடலில் 1948, ஜனவரி 30-ஆம் நாள் துப்பாக்கி யால் காந்திஜியைச் சுட்டேன்.

இனி, நான் சொல்வதற்கு எதுவும் இல்லை; ஒருவன் அவனுடைய தேசத்திடம் பக்தி செலுத்துவது பாபம் என்றால் நான் செய்தது பாபம்தான். அது பெருமைக் குரியது என்றால் அந்தப் பெருமை எனக்கு உண்டு என்பதைப் பணிவுடன் தெரி வித்துக் கொள்கிறேன். மனிதர்களால் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்திற்கு அப்பால் வேறொரு நீதி மன்றம் இருக்கு மானால் அங்கு என்னுடைய செயல் அநீதியானது என்று சொல்லப்பட மாட்டாது என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது. சாவுக்குப்பிறகு செல்வதற்கு அப்படிப்பட்ட ஓர் இடம் இல்லை என்பதால் அதைப்பற்றிச் சொல்வ தற்கு ஒன்றுமில்லை. மனித குலத்தின் நன்மையைக் கருதியே அந்தச் செயலை நான் செய்ய நேர்ந்தது. இலட்சக்கணக்கான இந்துக் களுக்கு அழிவைத் தருகின்ற கொள்கையைக் கொண்டிருந்த ஒருவரைத்தான் துப்பாக்கி யால் நான் சுட்டேன்.

இந்துஸ்தான் என்று சரியாக அறியப்பட்ட இந்த நாடு மீண்டும் ஒன்றாக இணையட்டும்; ஆதிக்க சக்திகளுக்கு அடிமைப்படுகின்ற தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபட மக்கள் பயிற்றுவிக்கப் படட்டும்; எல்லாம் வல்ல இறைவனிடம் நான் கடைசியாகப் பிரார்த்திப்பது இதுதான்.

எல்லாப் பக்கங்களிலிருந்தும் எனக்கு எதிராகச் செய்யப்படுகின்ற விமர்சனங்களால் எனது செயலில் நியாயத்தன்மை குலைந்துவிடாது என்பது என் நம்பிக்கையாகும். வரலாறு எழுதுவோர் எனது செயலில் உள்ள நியாயத்தைச் சரியாகவே மதிப்பிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது”.

- இவ்வாறு கோட்சே உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் தனது வாக்கு மூலத்தைக் கூறிமுடித்தார்.

“His main theme however, was the nature of a righteous man’s duty, his dharma as laid down in the Hindu scriptures. He made moving references to historical events and delivered an impassioned appeal to Hindus to told and preserve their motherland and fight for it with their very lives. He ended his peroration on a high note of emotion, reciting verses from Bhagawadgita”

‘The murderer of the Mahatma’, , நூல் ஆசிரியர் - பஞ்சாப் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் திரு.ஜி.டி.கோஸ்வா.

இந்துமதச் சாத்திரங்களில் சொல்லப்பட்டபடி நடந்து கொள்வது தான் நல்ல மனிதன் ஒருவனுடைய கடமை - தர்மம் ஆகும் என்பதே (கோட்சே அளித்த வாக்கு மூலத்தின்) அடிப் படையாக இருந்தது. உள்ளத்தைத் தொடும் வகையில் வரலாற் றுச் சான்றுகளை அவர் மேற்கோளாக எடுத்துக் காட்டினார். தாய்நாட்டைக் காக்க வேண்டும்; தாயகத்தைக் காப்பதற்காக உயிரைக் கொடுத்துப் போராட வேண்டும் என்று இந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பகவத் கீதையிலிருந்து சில சுலோகங் களைச் சொல்லி உணர்ச்சி கரமாகத் தனது உரையை முடித்தார்”.

குறிப்பு: இந்தக் கீதையைத்தான் அமைதிக்கான ஒன்றாக சங்கராச்சாரியார் கூறுகிறார் - ஆமாம் சாமி என்றுதுக்ளக்கில் குருமூர்த்தியும் எழுதுகிறார்.

No comments:

Post a Comment