காவி சாமியாரின் காம லீலைகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 19, 2021

காவி சாமியாரின் காம லீலைகள்!

ஆசிரமத்தில் இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் கைது

மதுரை, டிச.19 ஆசிரமத்தில் குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த மனை வியும் கைதானார்.

சென்னை புழல் அடுத்த பத்மாவதி நகரை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 48). சாமியாரான இவர், புழல் விநாய கபுரம் சூரப்பட்டு சாலை அருகே ஆசிரமம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி புஷ்பலதா (வயது 43).

கொளத்தூரைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண், தான் பிளஸ்-2 படிக்கும்போது தனது தாயாருடன் இந்த ஆசிரமத் துக்கு வந்து சென்றார். அப் போது அவருக்கு சாமியார் சங் கரநாராயணனுடன் அறிமுகம் ஏற்பட்டது.

அதன்பிறகு மீண்டும் ஆசிர மத்துக்கு வந்த அவருக்கு, சாமி யார் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலி யல் பலாத்காரம் செய்து விட் டார். இதற்கு சாமியாரின் மனை வியும் உடந்தையாக இருந்தார்.

2018ஆம் ஆண்டு அந்த பெண்ணுக்கு திருமணம் ஆனது. கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதை அறிந்த சாமியார் சங்கரநாராயணன், மீண்டும் பெண்ணை ஆசிரமத் துக்கு அழைத்து தனது ஆசைக்கு இணங்காவிட்டால் உனது அந்தரங்க படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதில் இளம்பெண் கர்ப்ப மானார். அவருக்கு குழந்தையும் பிறந்து விட்டது. அதன்பிறகும் சாமியார் அவருக்கு தொலை பேசி செய்து, தன்னுடன் உல் லாசத்துக்கு வரும்படி அழைத்து மிரட்டியதால் விரக்தி அடைந்த இளம்பெண், மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் ஆய்வாளர் கண்ணகி வழக்குப்பதிவு செய்து சாமியார் சங்கரநாராயணன், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவி புஷ்பலதா இருவரையும் போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்து விசா ரித்து வருகிறார்.


No comments:

Post a Comment