செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமனத்தில் 69% இடஒதுக்கீடு - அறிவிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 19, 2021

செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமனத்தில் 69% இடஒதுக்கீடு - அறிவிப்பு!

நாம் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அய்யப்பாட்டைக் களைந்ததற்கு நன்றி! நன்றி!!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் செவிலியர்கள், சுகாதார ஆய் வாளர்கள் பணி நியமனத்தில் 69 விழுக்காடு கடைப்பிடிக்கப்படும் என்று தெளிவாகத் தெரிவித்தமைக்காக முதலமைச்சருக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும் பாராட்டையும், நன்றியையும் தெரிவிக்கும் வகையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

"மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் நேற்று  (18-12-2021) சென்னை தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத் தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் வரவேற்கத்தகுந்த அறிவிப்பு

கிராம சுகாதார சேவையை மேம்படுத்த புதியதாக 4,848 செவிலியர்கள் மற்றும் 2,448 சுகாதார ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார்.

நலவாழ்வு மய்யங்களில் (Health and Wellness Centres) தற்காலிக அடிப்படையில் செவிலியர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் செவிலியருக்கு மாத ஊதியம் ரூ14,000/- மும், சுகாதார ஆய்வாளருக்கு ரூ.11,000/- மும் வழங்கப்பட உள்ளது.

கோவிட்-19 நோய்த்தொற்றில் பணியாற்றியவர் களுக்கும், உள்ளூரில் பயின்றவர்களுக்கும் முன் னுரிமை அடிப்படையில் பணிவழங்க வழிகாட்டு தல்கள் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாநில அளவில், சமூக நீதியை காக்கும் வகை யில் பணிநியமனங்கள் செய்வதில் அவரவர்க்குரிய இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்படும். 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடித்து நலவாழ்வு மய்யங்களில் சுகாதார ஆய்வாளர்கள் 2,448 பேரும், இடைநிலை சுகா தார பணியாளர்கள் 4,848 பேரும் ஆக மொத்தம் 7,296 பேரும் தேர்ந்தெ டுக்கப்பட உள்ளனர் என்று  அமைச்சர் மா. சுப்பிர மணியன் அவர்கள் தெரிவித்தார்."

மேற்காட்டிய செய்தி - அறிக்கைக்கென தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.. ஸ்டாலின் அவர்களையும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் அவர்களையும் சமூகநீதிப் போராளிகள் அனை வரும் பாராட்டி நன்றி சொல்வர் என்பது திண்ணம்.

தவறாக வந்த ஒரு தகவல்!

காரணம், சில நாள்களுக்கு முன் விரைவில் நிரப்பப்படவிருக்கும் அந்த ஏழாயிரத்திற்கு மேற் பட்ட பணிகளில், இடஒதுக்கீடு பின்பற்றப்படப் போவதில்லை என்பது போன்ற ஒரு தகவல் சில ஏடுகளிலும், சமூக ஊடகங்களிலும் பரப்பப்பட்டது.

நாம் உடனடியாக அதை மாண்புமிகு முதலமைச் சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றவுடன் சிறிதும் தாமதிக்காமல் அவர்கள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் மூலமாக மேற்கண்ட தகவலை அளித்து, தமிழ்நாடு சமூகநீதி மண் - காரணம் இது சமூகநீதிக்காகவே தனது வாழ்நாள் தொண்டாற்றிய தந்தை பெரியாரின் மண் - அதற்காகவே திராவிடர் இயக்கம் அதனை தனது மூச்சாகக் கொண்ட மண் என்பதை இதன்மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

எனினும் எப்போதும் எச்சரிக்கையுடன் வரும் ஆபத்துகளைக் கண்காணிப்பதே நமது வேலையாக இருக்க வேண்டும் என்பதையும் சமூகநீதிப் போராளிகள் மறக்கவில்லை!

நன்றி! நன்றி!!

தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும் - இதிலும் 69 சதவிகித இடஒதுக்கீடு  கட்டாயம் பின்பற்றப்படும் என்ற திட்டவட்ட அறிவிப்புக்கு நமது நன்றி! நன்றி!!

கிவீரமணி

தலைவர்

திராவிடர் கழகம் 

சென்னை       

19.12.2021          


No comments:

Post a Comment