இனமானப் பேராசிரியரின் நூற்றாண்டு விழா தொடக்க நாள் - 19.12.2021 படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 19, 2021

இனமானப் பேராசிரியரின் நூற்றாண்டு விழா தொடக்க நாள் - 19.12.2021 படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

இனமானப் பேராசிரியரின் நூற்றாண்டு விழா இன்று (19.12.2021) தொடக்கத்தையொட்டி தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று காலை சென்னை பெரியார் திடலில் வைக்கப்பட்டிருந்த இனமானப்  பேராசிரியர் . அன்பழகன் அவர்களின் படத்திற்கு திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், கழக வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி மற்றும் தோழர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்

இனமானப் பேராசிரியர் . அன்பழகன் அவர்களின் இல்லத்திற்கு (சென்னை கீழ்ப்பாக்கம்) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இன்று சென்று  இனமானப் பேராசிரியரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி ஆகியோர் உடன் சென்று மரியாதை செலுத்தினர். பேராசிரியர் அவர்களின் மகன் . அன்புச்செல்வன், பேராசிரியரின் பெயரனும், சட்டப் பேரவை உறுப்பினருமான .வெற்றியழகன் மற்றும் மருமகன் டாக்டர் சொக்கலிங்கம் உள்ளிட்ட குடும்பத் தினருடன் அளவளாவி கழகத் தலைவர் விடை பெற்றார்.

No comments:

Post a Comment