சென்னை, டிச.19 - அகில இந்திய யூனியன் வங்கி பிற்படுத்தப்பட் டோர் நல சங்கத்தின் சார்பில், வங்கிகளைத் தனியார்மயமாக்கு வதற்கு எதிராகவும், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தக் கோரியும், கிரீமிலேயரை ஒழிக்கவும், இட ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பை நீக்கக் கோரியும் சென்னை பிராட்வேயில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா மண்டல அலுவலக வளாகத்தில் 18.12.2021 மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செய லாளர் கோ.கருணாநிதி தலைமை வகித்து உரையாற்றினார். யூனி யன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ரவிக் குமார் அனைவரையும் வர வேற்று பேசினார்.
வங்கிகளை தனியார் மயமாக் குவதற்கு எதிராகவும், பிற்படுத் தப்பட்டோர் நலனுக்கு எதிரான கிரிமிலேயர் முறையை ஒழித்தி டவும், 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பு நீக்கக் கோரியும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத் திட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியும் முழக் கங்களை எழுப்பப்பட்டன.
யூனியன் வங்கி பிற்படுத்தப் பட்டோர் நல சங்கத்தின் உறுப் பினர்கள், மற்றும், நியூ இந்தியா காப்பீட்டுக் கழகம், அய்.அய்.டி., அய்.சி.எப்., சென்னை உரத் தொழிற்சாலை, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, ஆவடி கனரக தொழிற் சாலை, மக்கள் கணக்கெடுப்பு துறை, அய்.சி.எம்.ஆர், ஏர் இந் தியா உள்ளிட்ட நிறுவன இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் நல சங்கத் தலைவர்கள், உறுப் பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment