ஆண்டவனைப் படைத்ததில் ஆரியரும் வள்ளுவரும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 3, 2021

ஆண்டவனைப் படைத்ததில் ஆரியரும் வள்ளுவரும்

13.11.1948 - குடிஅரசிலிருந்து...

திருவள்ளுவர் குறளோ ஆரியத்தை, ஆரிய தர்மத்தை அப்படியே மறுக்க எழுதப்பட்ட நூலாகக் காணப்படுகிறது. கடவுள் வாழ்த்தில்கூட வள்ளுவர் ஒழுக்கத்தையும், அறிவையும், பற்றற்ற தன்மையையும்தான் கடவுளாகக் காட்டியுள்ளார். கடவுளை அறிஞன் என்றார். பிறப்பு, இறப்பு அறுத்தோன் என்கிறார். ஆசை அறுத்தோன் என்கிறார். அவர் ஒரு இடத்திலாவது கடவுளை அயோக்கியனாகவோ, ஒழுக்க ஈனம் உடையவனாகவோ, வஞ்சகனாகவோ, விபசாரியாகவோ சிருஷ்டித்திருக்கவில்லை. ஆரிய நூல்களில் சிருஷ்டிக்கப்பட்டுள்ள கடவுள் தன்மையிலுள்ள ஆபாசக் கேட்டிற்கோ அளவு சொல்ல வேண்டியதில்லை. கீதை போற்றும் கிருஷ்ணனைப் போன்ற விபசாரக்காரனை வஞ்சகனை, கீழ்மகன் தன்மையை ஆரியர்கள் தவிர்த்த வேறு யாரும் கடவுளாக, நீதியாக சிருஷ்டித்திருக்க மாட்டார்கள். அவன் ஒரு விபசாரிக்கல்ல, லட்சக்கணக்கான பெண்களைக் கெடுத்து விபசாரிகளுக்கும், குடிப்பெண்களுக்கும் காமுகனாய், காதகனாய் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான். பிறந்தது முதற்கொண்டு சாகும் வரையில் அவன் ஒரு சந்தர்ப்பத்திலாவது ஒழுக்கமாக நடந்து கொண்டிருப்பதாக யாராலும் காட்ட முடியாது. அவன் நடத்தைகள் லீலைகளாக்கப் பட்டிருக்கின்றன.


No comments:

Post a Comment