பன்னாட்டு அளவில் அதிக வெப்பத்தை வெளியிடும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அதிக வெப்பத்தை வெளியிடும் 50 நகரங்களில் இந்தியாவிலேயே 17 நகரங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்தப் பட்டியலில் வங்கதேச நாட்டின் தலைநகர் டாக்கா முதலிடத்தில் உள்ளது. டில்லி 2ஆம் இடத்திலும், கொல்கத்தா 3ஆம் இடத்திலும், தாய்லாந்து நாட்டின் தலை நகர் பாங்க்காக் 4ஆம் இடத்திலும் உள்ளன.
அடுத்ததாக மும்பை 5ஆம் இடத்திலும், சென்னை 7ஆவது இடத்திலும் உள்ளன. காலநிலை மாற்றமும் நகரங்களில் மக்கள் தொகை வேகமாக அதிகரிப்பதுமே இதற்கு முக்கிய காரணிகளாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்காவில் சில நகரங்களில் வெப்பத்தை வெளியிடுவது வேகமாக அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment