"காந்தியாரின் படத்தையோ, சட்டத்தையோ கொளுத் துவேன் என்று பெரியார் சொல் வதற்குரிய கார ணத்தைக் கண்டறிந்து, அதை நீக்க முய லுங்கள்! அவரை அடக்க முயலாதீர்கள்!! பெரியார் அவர்களுடைய செயலுக்குப் பின் னால் இருக்கிற நோக்கத்தைத் தயவு செய்து எண்ணிப் பாருங்கள்.. அவரைச் சுலபத்தில் பைத்தியக்காரன் என்று சொல்லிவிடுவீர்களானால், நம்மை அப்படிச் சொல்ல அதிக நாள் ஆகாது என்பதை உணருங்கள். அவரைப் பைத்தியக்காரன் என்று பக்தவத்சலம் சொல்கிற மாதிரி பெரியார் செய்தது என்ன? ஜாதி ஒழிய வேண்டும் என்றுதானே? பெரியார் அரசியல் சட்டத்தைக் கொளுத்துவதன் மூலம் இன்று ஜாதியால் இருக்கும் பல கேடுகளை உணர்த்தத்தான்.
இந்த ஏழு ஆண்டுகளில் இந்திய அரசியல் சட்டத்தை 10முறை திருத்தியிருக்கிறீர்கள்! திருத் தங்கள் என்பதே நாகரிகமான முறையில் 10 முறை நீங்களே கொளுத்தியிருக்கிறீர்கள். தேசியக் கொடியும் சட்டமும் அவமதிக்கப்பட்டால் அது தன் நெஞ்சில் புண்ணை ஏற்படுத்தும் என்று அமைச்சர் பக்த வத்சலம் கருதுவது போல, பெரியாரை நீங்கள் கடுமையான சட்டம் கொண்டு வந்தால் மனம் புண்படுபவர்கள் இன்று தமிழகத்தில் இலட்சக் கணக்கில் இருக்கிறார்கள் என்பதையும் தயவு செய்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இச்சட்டம் தேவையற்றது; தீங்கானது; கொடுங்கோன்மைக்கு வழி வகுப்பது." இவ்வாறு அண்ணா பேசினார்.
- சட்டப் பேரவையில் அண்ணா
No comments:
Post a Comment