ஸ்ரீநிவாச அய்யங்கார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 6, 2021

ஸ்ரீநிவாச அய்யங்கார்

விஜயபாரதம்' என்ற ஆர்.எஸ்.எஸ். இதழ் வழக்கம்போல இவ் வாண்டும் - தீபாவளி மலர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ஒரு கட்டுரை - ‘‘சமூகநீதியின் உண்மை முகங்கள்'' என்பதாகும் (பக்கம் 118-121).

‘‘மயிலை ஸ்ரீநிவாச அய்யங்கார் 1875 களில் மிகப் புகழ்பெற்ற வழக் குரைஞர். இவருக்குள்ள ஒரு விசேஷ குணம் என்னவென்றால், தனது ஜூனியர்களாக ஆதித் தமிழ் இளைஞர்களை மட்டுமே வைத்துக் கொள்வார். சக வழக்குரை ஞர்கள் இதைப்பற்றிக் கேட்டால் ‘‘மற்ற ஜாதி இளைஞர்களுக்கு உங் களைப் போன்றவர்கள் உள்ளனர். இவர்களுக்கு என்னை விட்டால் யார் இருக்கிறார்கள்?'' என்று கேட்டு வாயடைத்து விடு வார். இதனால் இவருக்கு ஹரிஜன அய்யங்கார் என்ற சிறப்புப் பெயரும் வாய்த்தது. நீதிமன்றத்தில் மட்டுமல்லாமல், அவ ரது வீட்டிலும் அந்த இளை ஞர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். மாடசாமி என்ற இளைஞரை தனது வளர்ப்பு மகனாகத் தத் தெடுத்து, அவனுக்குத் திரு மணமும் தனது செலவில் செய்து வைத்தார். திரு மணம் என்றால் எப்படி? மயிலை நான்கு வீதிகளில் ஜானுவாசம், இசைக் கச்சேரி என நான்கு நாட்கள் தடபுடல் விருந்து திருமணம்.''

இவ்வாறு விலாவாரி யாக, சாங்கோபாங்கமாகவிஜயபாரதம்' சிண்டைத் தட்டிவிட்டு வரைந்து தள்ளியுள்ளது.

ஓர் அய்யங்கார் ஆதி திராவிடர் தோழர்களை சமமாக நடத்தினார் என்று கூறி, பெரியார் இயக் கத்தவர்களை நையாண்டி செய்கிறது.

விஜயபாரதம்' கூறு வதுபடியே வருவோம் - அந்தப் பணியைத்தானே பெரியாரும்,  திராவிட இயக்கமும் செய்து வந்தது - வருகிறது.

ஆதிதிராவிடர் தோழர் அர்ச்சகராக வேண்டும் என்று கூறினால், சட்டம் செய்தால், உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லு வோர் யார்?

பார்ப்பனர்கள்தானே!

அதே ஆதிதிராவி டர்கள்பற்றிவிஜயபாரதங் களில்' ‘ஜெகத்குரு'வான சங்கராச்சாரியார்தீண் டாமை க்ஷேமகரமானது' என்று கூறுவதுபற்றி கண்டித்து எழுதியதுண்டா?

விஜயபாரதம்' தீபாவளி மலரில் பல இடங்களில் .வே.சு. அய்யரைப் பலபடப் பாராட்டி எழுதித் தள்ளியுள்ளதே!

அந்த .வே.சு. அய்யர் தானே சேரன்மாதேவி குருகுலத்தில்பிராமணாள் - சூத்திராள்' என்று பேதப்படுத்தி நடத்தினார்.

அதனை எதிர்த்து இழுத்து மூடியவர்கள் தானே பெரியாரும், டாக்டர் வரதராஜூலு நாயுடுவும்.

விஜயபாரதமே, பதில் சொல் பார்க்கலாம்.

 - மயிலாடன்

No comments:

Post a Comment