மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 6, 2021

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

உப்பிலியபுரம், நவ. 6- உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஆர்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). விவசாயி. 04.11.2021 அதிகாலை தனது தோட்டத்திற்கு சென்ற அவர், போர்வெல் மோட்டாருக்கு செல்லும் வயரை மிதித்ததாக தெரிகிறது. மின்கசிவின் காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட ரவிச் சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த உப்பிலியபுரம் காவல்துறையினர், ரவிச்சந் திரன் உடலை மீட்டு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.

தொடர் மழையால் காட்டாற்று வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது

திருச்சி, நவ. 6- திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காட்டாற்று வெள்ளம் ஓடக்கூடிய இடத்தில் மேம்பாலம் பணி அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதி யில் இருந்து வெளியேறும் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

அந்த தண்ணீரை வெளியேற்றுவதற்காக பொதுமக்கள் காவல் துறை மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தை ஊராட்சி மன்ற தலைவர் வியாகுல ஈசுவரி ஜெயக்குமார் மற்றும் கல்லக்குடி காவல் துறையினர் பார்வையிட்டு தண்ணீர் வடிந்து செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

இங்கு வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்கள். வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து குழந்தைகளுடன் பாதுகாப்பாக வாழ நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டு உள்ளனர். இப்பகுதியில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மய்யம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மழை வருவதற்குள் இப்பகுதியில் மழைநீர் வழிந்தோட தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலை வாங்கி தருவதாக பட்டதாரி வாலிபரிடம் ரூ.58 லட்சம் மோசடி

திருச்சி விடுதியில் பதுங்கியவர் கைது

திருச்சி, நவ. 6- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கல்பாளையம் சாலை பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். பட்டதாரியான இவர் அரசு வேலையில் சேருவதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இது தொடர்பாக திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நெட்டவேலம்பட் டியை சேர்ந்த அருண்குமார் என்பவர் அறிமுகமாகி யுள்ளார்.

சோமசுந்தரம் வேலை தேடுவதை அறிந்து கொண்டு, பணம் கொடுத்தால் ஆவின் நிறுவனத்தில் உதவி மேலா ளர் மற்றும் மூத்த தொழிற்சாலை உதவியாளர் ஆகிய பணிகளில் நிரந்தர வேலை வாங்கிவிடலாம் என்று அருண் குமார் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய சோமசுந்தரம், அவர் கேட்டது போல் ரூ.58 லட்சத்து 28 ஆயிரத்து 500 பணத்தை அருண்குமாரிடம் கொடுத்து உள்ளார். ஆனால் நாட்கள் கடந்த நிலையில் வேலை வாங்கித் தராமல், சோமசுந்தரத்திடம் பேசுவதையும், அருண்குமார் தொடர்ந்து தவிர்த்து வந்தார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சோம சுந்தரம், வேலை வேண்டாம், கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டுள்ளார்.அதற்கு அருண் குமார், பணத்தை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனை கேட்ட சோமசுந்தரம் உடனடியாக அரியலூர் மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் தலைமறைவான அருண்குமாரை தனிப்படை அமைத்து தேடி விசாரித்து வந்தனர்.

விசாரணையில், திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அருண்குமார் பதுங்கி இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. உடனடியாக அப்பகுதிக்குசென்ற தனிப்படை காவல்துறையினர், அங்கு தனியார்விடுதியில் பதுங்கியிருந்த அருண் குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல் அருண்குமார் பலரிடம் ஆவின்நிறுவனத் தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட் டிருக்கலாம் என்ற கோணத்தில் குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கூட்டு பாலியல் வன்கொடுமையால் இளம்பெண் மரணம் தஞ்சையில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், நவ. 6- தஞ்சை மாவட்டம் சூரியக் கோட்டை கிராமத்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாதர் சங்கத்தினர் பெண்ணின் உயிரிழந்த நிலையின் உருவபொம்மை உடன் கண்ணீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சூழியக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகள் முப்பத்தி ஒரு வயது உடைய திருமண மாகாத இளம் பெண் கனகவல்லி கடந்த மாதம் 25ஆம் தேதி ஆடுகளை மேய்க்கச் சென்ற போது அங்குள்ள காட்டுப்பகுதியில் உடைகள் களையப்பட்டு ரத்த வெள்ளத் தில் பிணமாக கிடந்தார்.

கனகவல்லி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந் தேகம் எழுந்த நிலையில், அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 12 மணி நேரத்தில் பெரியசாமி மற்றும் சதீஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும் பத்திற்கு தமிழ்நாடு அரசு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி அம்மாபேட்டை பேருந்து நிலையம் பகுதியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வி தலைமையில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment