வாரத்தில் ஒரு நாள் விடுமுறை: முதலமைச்சருக்கு காவல் துறை நன்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 6, 2021

வாரத்தில் ஒரு நாள் விடுமுறை: முதலமைச்சருக்கு காவல் துறை நன்றி

வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கி அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காவல்துறை நன்றி தெரிவித்துள்ளது.இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரை வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி வார ஓய்வு குறித்து கடந்த 3ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரையில் 5 நாட்கள் பணியும், ஆறாவது  நாளில் பணி மேற்கொண்டால் அதற்கு உண்டான மிகைப் பணி ஊதியமும், வாரத்தில் ஒரு நாள் ஓய்வும் வழங்கப்படும்.காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த வார ஓய்வு குறித்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு காவல்துறை நெஞ்சார்ந்த நன்றிகளையும், வணக்கத்தையும் தெரிவித்து கொண்டது.

No comments:

Post a Comment