பாரீஸ், அக். 2- பிரான்சில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை நிகோலஸ் சர்கோசி (66) அதிப ராக இருந்தார். 2012ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பிரச்சாரத்துக்காக அவர் சட்ட விரோத மாக பல கோடி ரூபாய் நிதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இத்தேர்தலில் அவர் தோற்றார். , சட்ட விரோத நிதி அளித்தது பற்றி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தீர்ப்பில், நீதிபதி அவரை குற்றவாளியாக அறிவித்தார். மேலும், அவருக்கு ஓராண்டு சிறைத் தண்ட னையும் விதித்தார். இந்த தண்டனை காலத்தை வீட்டு சிறையிலேயே கழிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.
ஆப்கன் மக்கள் எங்களை ஆதரிக்கின்றனர்; அய்.நா.வும் எங்களை அங்கீகரிக்க வேண்டும் தலிபான்கள் கோரிக்கை
காபூல், அக். 2- ஆப்கன் மக்கள் எங்களை ஆதரிக்கின்றனர். அதனால், அய்.நா.,வும் எங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று தலிபான்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில், அய்.நா.வின் நிரந்தரப் பிரதிநிதியாக ஆப்கானிஸ்தான் சார்பில் முஹம்மது சுஹைல் ஷாஹீனை தலிபான்கள் நியமித்தனர். அய்.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க தலிபான்கள் அனுமதி கோரினர். ஆனால், அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதேபோல், ஆப்கனின் முன்னாள் அரசின் அய்.நா. பிரதிநிதியும் அய்.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை.
இந்நிலையில், சுஹைல் ஷாஹீன் தனது சுட்டுரைப் பக்கத்தில், "காபூல் நிர்வாகம் இப்போது செயல்பாட்டில் இல்லை. இப்போது இங்கே செயல்படுவது இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தானின் ஆட்சி. இந்த ஆட்சி ஓர் அரசாங்கத்துக்கான அத்தனை அம்சங்களை யும் கொண்டுள்ளது. இதுதான் ஆப்கன் மக்களின் உண் மையான பிரதிநிதி. அதனால், எங்களுக்கு அய்.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க தகுதி இருக்கிறது. எங்களை ஆப்கன் மக்கள் ஆதரிக்கின்றனர். ஆகையால் அய்.நா. எங்களை அங்கீகரிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். அய்.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்று உலகம் ஏற்கும் நாடாக ஆப்கனை உருவாக்க தலிபான்கள் விரும்பினர். அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவை உள்ளடக்கிய ஒன்பது பேர் கொண்ட அய்.நா. குழுவுக்கு ஆப்கனின் கோரிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், இந்த முறை அதற்கு எவ்வித தீர்வும் கிட்டவில்லை. இருப்பினும் தொடர்ந்து முயற்சிகளைக் கைவிடாமல் தலிபான்கள் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment