இந்த மாதத்தில் வங்கிகளுக்கு 11 நாள் விடுமுறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 2, 2021

இந்த மாதத்தில் வங்கிகளுக்கு 11 நாள் விடுமுறை

புதுடில்லி, அக்.2- இந்த மாதத்தில் வங்கிகளுக்கு 11 நாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2ஆம் தேதியான - காந்தி ஜெயந்தி, 3ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை, 9ஆம் தேதி - 2ஆவது சனிக் கிழமை, 10ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை, 14ஆம் தேதி - ஆயுதபூஜை, 15ஆம் தேதி - விஜயதசமி, 17ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை, 19ஆம் தேதி - மிலாடிநபி, 23ஆம் தேதி - 4ஆவது சனிக்கிழமை, 24ஆம் தேதி - ஞாயிற்றுக் கிழமை, 31ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை என 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் ஆகும்.

இதனை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் வங்கி தொடர்பான செயல்பாடுகளுக்கு முன்கூட்டியே திட்டமிட் டுக் கொள்ள வேண்டும் என நிதி ஆலோசகர்கள் தெரி வித்து உள்ளனர்.

அக்.4 முதல் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு

அசல் மதிப்பெண் சான்றிதழ்

சென்னை, அக். 2- அக். 4ஆம் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடர்பான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அனைத்து பள்ளி மாணவர் களும் வருகிற 4ஆம் தேதி (நாளை மறுதினம்) காலை 10 மணி முதல் தாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள பள் ளிக்கு வரும் தேர்வர்கள், பெற்றோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதுடன், சமூக இடைவெளியினை கண்டிப் பாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை பல்கலைக்கழகத்தில் 25ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள்

புதுச்சேரி, அக்.2 அக்டோபர் 25ஆம் தேதி முதல் புதுவை பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 25ஆம் தேதி முதல் புதுவை பல்கலைக் கழகத்தில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் கரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங் கியுள்ளன. அதே நேரத்தில் புதுவை பல்கலைக்கழகத்தில் இன்னும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படவில்லை.

இதுகுறித்து மாணவர் சங்கங்கள் வலியுறுத்தி வந்த நிலையில் நேரடி வகுப்புகளை தொடங்குவதற்கான அறிவிப்புகளை பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆய்வு மாணவர்களில் அறிவியல் தொழில் நுட்ப மாணவர்களுக்கு வருகிற 25ஆம் தேதி வகுப்புகள் தொடங்குகிறது. இறுதியாண்டு பட்டமேற்படிப்பு மாணவர் கள் 3ஆம் ஆண்டு மாணவர்கள் (ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்பு) டிசம்பர் 6ஆம் தேதியும், சமூக அறிவியல் பிரிவில் இறுதியாண்டு மற்றும் 3ஆம் ஆண்டு மாணவர் களுக்கு (ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்பு) ஜனவரி 17ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்குகின்றன.

இதர அனைத்து பட்டமேற்படிப்பு மாணவர்கள், ஆய்வு படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் ஆகி யோருக்கு நேரடி வகுப்பு தொடங்கும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இதற்கான அறிவிப்பை பல்கலைக்கழக பதிவாளர் அமரேஷ் சமந்த்ராயா வெளியிட்டுள்ளார்.

விரிவுரையாளர் தேர்வு முறைகேடு

66 பேருக்கு வாழ்நாள் தடை

சென்னை, அக். 2- பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 66 பேருக்கு, தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆயிரத்து 58 விரிவுரை யாளர் பணியிடங்களுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 2 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறி விக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்களில் பலர் பணம் கொடுத்து, அதிக மதிப் பெண் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது. இதையடுத்து 199 பேர் மீது வாழ்நாள்  தடை விதித்து ஆசிரியர் தேர்வு ஆணையம் நடவடிக்கை எடுத்தது.

அதுதொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில், தற்போது முறைகேட்டில் ஈடுபட்டதாக மேலும் 66 பேர் சிக்கியுள்ளனர். அவர்களின் முழு முகவரி மற்றும்  விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2017-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட விரிவுரையாளர் பணிக்கான தேர்வு மீண்டும் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாகன ஆவணங்கள் வரும்

31ஆம் தேதி வரை செல்லும்

புதுடில்லி, அக். 2- வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை வரும் 31ஆம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன. இன்னும் இயல்பு நிலைக்கு பல்வேறு துறைகளும் திரும்பாததால்,வாகன ஆவணங் களையும் புதுப்பிப்பதில் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

ஓட்டுனர் உரிமம், பதிவு சான்றிதழ், தகுதி மற்றும் அனு மதி சான்றிதழ் போன்ற வாகன ஆவணங்களின் செல்லுபடி யாகும் காலம் கடந்த மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டது.

இந்நிலையில், வாகன ஆவணங்களின் செல்லுபடி யாகும் காலத்தை வரும் 31ஆம் தேதி வரை மேலும் ஒரு மாத காலம் நீட்டித்து ஒன்றிய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


No comments:

Post a Comment