சென்னை, அக். 2- தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தொடரில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது அத்துறையின் அமைச் சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில் பனை மரம் மற்றும் பனை சார்ந்த உற் பத்திப் பொருட்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருந்தது.
பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவேண்டும் என்ற ஒரு அறிவிப்பும் வெளியாகியிருந்தது. அதே போல் பனைவெல்லம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை பங்கீட்டுக் கடைகளில் விற்க ஏற்பாடு செய்யப் படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட நியாயவிலை கடை களில், அமுதம் அங்காடிகளில் பனைவெல்லம் விற்க தற்போது தமிழ்நாடு அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது. உணவுப் பங்கீட்டுக் கடைகளில் 100 கிராம் முதல் 1 கிலோ வரை பனைவெல்லம் விற் கத் திட்டமிடப்பட்டு தற் பொழுது இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இதில் குடும்ப அட் டைதாரர்களை பனை வெல்லம் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment