ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை ‘பணியிடை நீக்கம்’ செய்வதை தவிர்க்க அரசாணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 31, 2021

ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை ‘பணியிடை நீக்கம்’ செய்வதை தவிர்க்க அரசாணை

சென்னை, அக். 31-  அரசு ஊழி யர்களை ஓய்வுபெறும் நாளில்பணியிடை நீக்கம்செய்யும் நடைமுறையை தவிர்ப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ளது.

மனிதவள மேலாண்மைத் துறைவெளியிட்ட அர சாணையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழி யர்கள்தவறு செய்து அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், துறை ரீதியான விசாரணை நடத் தப்பட்டு, தண்டனை வழங்கப்படு கிறது. சில வழக்குகளில் தவறு செய்பவர் மீதான விசாரணை நீண்டகாலம் செல்லும்போது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக் கைக்காக அவர் தற்காலிக இடை நீக்கத்தில் (சஸ்பெண்ட்) வைக்கப் படுகிறார்.

இந்நிலையில் விசாரணையில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க தமிழ்நாடு அரசு சில வழிகாட்டுதல் களை வழங்கியுள்ளது.

அதன்படி, துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முன்னர், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீதான குற்றச்சாட்டுக் களில் முகாந்திரம் உள்ளதா, மிகப்பெரிய தண்டனை, குறிப்பாக பணி நீக்கம் செய்வதற்கு உரியதா என்பது ஆய்வு செய்யப்பட வேண் டும். இதன் மூலம், தேவையற்ற தாமதம் தவிர்க்கப்படும்.

அரசு ஊழியர் ஒருவர் முறை கேட்டில் ஈடுபட்டது தெரியவந் தால், ஓய்வு பெறும் நாளில் பணியிடைநீக்கம் செய்வதை தவிர்த்து, 3 மாதங்களுக்கு முன்னதாகவே உரிய முடிவை எடுக்க வேண்டும். விசாரணை, நட வடிக்கை ஆகிய வற்றுக்கு உரிய கால அளவை ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.

சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் ஓய்வு பெறுவதைக் கருத்தில் கொண்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் உரிய விளக்கத்தை அளிக்க வாய்ப்பு கொடுத்து, இயற்கை நியதிக்கு ஏற்ப நடவ டிக்கை எடுக்க வேண்டும். இந்த செயல்பாடுகள் அனைத்தும் எழுத் துப்பூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

ஓய்வு பெறுவதற்கு முன்னரே அதாவது 3 மாதங்க ளுக்கு முன் னரே துறை ரீதியான நடவடிக்கை களை முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்க இயலாத பட்சத்தில், நட வடிக்கையில் நிர்வாகரீதியான தாமதத்தைக் கருத்தில் கொண்டு அந்த அரசு ஊழியரை ஓய்வுபெற அனுமதிக்க வேண்டும்.

ஓய்வு பெறும் நாளுக்கு 3 மாதங் களுக்கு முன் ஏதேனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், போர்க்கால அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண் டும். தவறு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டால் பணியிடை நீக்கம் செய்யலாம்.

முறைகேட்டில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதான நடவடிக் கையை 3 மாதங்களுக்கு முன்முடிக் காமல் விசாரணை அதிகாரி தாம தப்படுத்தியிருப்பது தெரிய வந்தால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக் கலாம். இந்த அறிவுறுத்தல்கள் அனைத்தும் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை, குற்ற வழக்குகளுக்குப் பொருந் தாது. இவ்வாறு மனிதவள மேலாண் மைத் துறை வெளியிட்ட அரசா ணையில் கூறப்பட்டுள்ளது.

பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.694 கோடி ஒதுக்கீடு

சென்னை, அக்.31  தமிழ்நாட்டில் புதிய பேருந் துகளை கொள்முதல் செய்ய ரூ.694 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள், அலுவலகக் கட்டடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனா ளிகள் எளிதில் செல்லும் வகையில், உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 2016-இல் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.

இதன்படி, மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான பேருந்துகளை கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி, வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பில் தலைமை வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தமிழ்நாட்டில் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்காக ரூ.694 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் பிரத்யேக பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இது தொடர்பாக விரிவான பட்டியலுடன் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கு விசார ணையை நவம்பர் 2-ஆவது வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தர விட்டனர்.

No comments:

Post a Comment