மீட்புக்குழுவினர் தன்னைத் தேடுவதுகூட தெரியாமல் மீட்புப் பணியில் ஈடுபட்ட நபர்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 2, 2021

மீட்புக்குழுவினர் தன்னைத் தேடுவதுகூட தெரியாமல் மீட்புப் பணியில் ஈடுபட்ட நபர்...!

இஸ்தான்புல், அக். 2-- துருக்கி நாட்டின் புர்ஷா மாகாணத்தை சேர்ந்த 50 வயது நபர் முட்லு. இவர் தனது நண்பர்களுடன் இணைந்து புர்ஷா மாகா ணத்தில் உள்ள காட்டிற்குள் மது அருந்தியுள்ளார். மது போதையில் இருந்த அவர் நண்பர்களை விட்டு விலகி காட்டிற்குள் வழிதவறி சென்று விட்டார்.

தனது கணவர் வெகு நேர மாகியும் வீட்டிற்கு வராததால் இது குறித்து காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழு வினருக்கு முட்லுவின் மனைவி தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த காட்டுப்பகுதியில் முட்லுவை தேடி மீட்புக்குழுவினர் தேடு தல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த காட்டுப் பகுதியில் இருந்த ஒரு நபர் மீட்புப்பணியில் தானும் உங் களுடன் இணைந்துகொள்வ தாக கூறி மீட்புக்குழுவினருடன் இணைந்துள்ளார். மீட்புக் குழுவினர் தன்னைத்தான் தேடுகிறார்கள் என்பது தெரி யாமல் முட்லு தன்னைத்தானே தேடியுள்ளார்.

ஆனால், மீட்பு நடவடிக்கையின்போது அதிகாரிகள் தன் னைத்தான் தேடுகிறார்கள் என்று முட்லுவுக்கு சில மணி நேரம் கழித்து தெரிந்துள்ளது. இதனால், அவர் சந்தேகத்திற் குரிய வகையில் செயல்பட்டு உள்ளார்.

முட்லுவின் நடவடிக்கை யில் சந்தேகமடைந்த மீட்புக் குழுவினர் அவரது பெயரை கூறி அழைத்துள்ளனர். அப் போது, நான் இங்கு தான் இருக்கிறேன்என்று முட்லு பதிலளித்துள்ளார். இதை யடுத்து, அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அப் போது அதிகாரிகளிடம், எனக்கு கடுமையான தண்டனைகளை கொடுத்துவிடாதீர்கள்... எனது தந்தை என்னை கொன்றுவிடுவார்என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து முட் லுவை அவரது மனைவியிடம் ஒப்படைத்தனர். மேலும், மீட் புக்குழுவினருக்கே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தன் னைத்தானே தேடிய முட்லு வுக்கு அதிகாரிகள் அபராதம் ஏதேனும் விதித்தனரா? என் பது குறித்த விவரம் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment