சிறு நிறுவனங்களுக்கு கடன்: கால அவகாசம் நீட்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 2, 2021

சிறு நிறுவனங்களுக்கு கடன்: கால அவகாசம் நீட்டிப்பு

புதுடில்லி, அக். 2- ஒன்றிய அரசின், அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவ தற்கான கால அவகாசம், மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த திட்டம் அறிமுகப்படுத்தியதிலிருந்து இதுவரை, கிட்டத்தட்ட 1.15 கோடி குறு, சிறு, நடுத்தர நிறுவனங் களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக ஏற் பட்ட, பொருளாதார மந்த நிலை பாதிப்பிலிருந்து மீள்வதற்கு உதவும் வகையில், இந்த நிதி தொகுப்பை, ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்து இருந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி நிலவரப்படி, இதுவரை 2.86 லட்சம் கோடி ரூபாய் இத்திட்டத்தின் கீழ் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கடன் திட்டத் துக்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரி, பல்வேறு தொழில் துறையினரி டமிருந்து கோரிக்கை வைக்கப் பட்டது. இதையடுத்து, அரசு, கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்து உள்ளது.

மேலும், இந்த திட்டத் தின் கீழ் தேர்ந்துதெடுக்கப்பட்ட நிறுவனங்க ளுக்கு, கடன் தொகையை வழங்கு வதற்கான காலக்கெடு, அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. அத்துடன், ஏற்கெனவே கடன் பெற்றவர்கள் கூடுதலாக கடன் வசதி பெறுவது குறித்த விவ ரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.அரசின் இந்த திட்டத்தை பயன் படுத்தி, குறு, சிறு, நடுத்தர நிறுவனங் கள் தங்கள் நிலையை சீர்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment