புதுடில்லி, அக். 2- வங்கி கணக்கு வாயிலாக, மாதாந்திர பில்கள் மற்றும் தவணை தொகைகளை, ‘ஆட்டோ டெபிட்’ முறை யில் செலுத்துவதில், புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ரிசர்வ் வங்கியின் உத்தரவினை அடுத்து, இந்த மாறுதல்களை வங்கிகள் மேற்கொள்ள உள்ளன. இது குறித்து பெரும்பாலான வங்கிகள் தங்கள் வாடிக் கையாளர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளன. நம்மில் பலர், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலாக, அலைபேசி, ஓ.டி.டி., உள்ளிட்ட பல சேவைகளை பெற, அதற்கான கட்டணத்தை, ஆட்டோ டெபிட் வாயிலாக செலுத்தி வருகிறோம்.
சேவை அல்லது பொருளை அல்லது கடனை வழங்கும் நிறுவனங்கள், குறிப் பிட்ட தேதியில், நம் வங்கி கணக்கிலிருந்து தொகையை அதுவாகவே எடுத்துக் கொள்ளும். ஆனால், இனி வாடிக்கை யாளர்களுக்கு தெரிவிக்காமல், அப்படி பணம் எடுக்க முடியாது.பணம் எடுப்ப தற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக, வாடிக்கையாளர்களுக்கு அது குறித்த தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். இதற்கு அனுமதி வழங்கினால்தான் பணத்தை எடுக்க முடியும்.
மேலும், 5,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகை எனில், ‘ஒரு முறை வழங்கப்படும் கடவு எண்’ வாயிலாக ஒப்புதல் பெறப் பட்ட பிறகே, எடுக்க முடியும். கடந்த மார்ச் மாதம் இந்த கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்த நிலையில், வங்கிகள் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்று ஆறு மாதம் கால அவகாசம் கொடுத்த நிலையில், தற்போது புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
No comments:
Post a Comment