பயங்கரவாத ஒழிப்பில் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு இல்லை: தலிபான்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 11, 2021

பயங்கரவாத ஒழிப்பில் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு இல்லை: தலிபான்கள்

காபூல், அக். 11- ஆப்கானிஸ் தானில் இருந்து அமெ ரிக்க படைகள் வெளியேற தொடங்கிய நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக ஆக்கிரமித் தனர். அதன் பின்னர் ஏற் கெனவே தலிபான்களு டன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி ஆகஸ்டு 30ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை கள் முழுமையாக வெளி யேறின.

இந்த நிலையில் கத் தார் நாட்டின் தலைநகர் தோகாவில் தலிபான் பிர திநிதிகள் மற்றும் அமெ ரிக்க அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை 9.10.2021 அன்று தொடங் கியது.

இந்த பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன் பாக தலிபான் அரசியல் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் பத்திரிகையா ளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்களை ஒழிப்பதில் அமெரிக்கா வுடன் தலிபான் ஒத்து ழைக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், ‘‘எந்த வொரு பயங்கரவாத அச் சுறுத்தலையும் எங்களால் தனியாக சமாளிக்க முடி யும். எனவே பயங்கரவாத ஒழிப்பில் அமெரிக்காவு டன் எந்த ஒத்துழைப்பும் இருக்காது’’ என கூறி னார்.

No comments:

Post a Comment