காவிரி உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களை பாதுகாக்க நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 11, 2021

காவிரி உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களை பாதுகாக்க நடவடிக்கை

அமைச்சர் சி.வி.மெய்யநாதன் தகவல்

சென்னை, அக். 11- காவிரி உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என அமைச்சர் சி.வி. மெய்ய நாதன் கூறி யுள்ளார்.

காவிரி ஆற்றில் கழிவு நீர் வெளி யேற்றப்படு கின்றதா, என்பதை கண் காணிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள தாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சி.வி. மெய்ய நாதன் தெரிவித்துள் ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாடு அரசு அமைத்துள்ள குழுக்கள், சாயம் மற்றும் சலவை தொழிற் சாலை களில் இருந்து கழிவுநீர் காவிரி மற்றும் அதன் உபரி நதிகளில் வெளி யேற்றப்படுகின்றனவா என்பதை கண்டறிந்து வருவதாக கூறியுள்ளார்.

மேட்டூர் முதல் மயி லாடுதுறை வரை சென்னை அய்.அய்.டி. நிபுணர் குழு கூறியுள்ள பல்வேறு இடங்களில் மாசுக்கட் டுப்பாட்டு வாரிய அதி காரிகளால்  நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய் விற்கு அனுப்பப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குழுக்க ளின் ஆய்வறிக்கைப்படி காவிரி உள்ளிட்ட முக் கிய நீர் ஆதாரங்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என அமைச்சர் மெய்ய நாதன் கூறியுள் ளார்.

காவிரி ஆற்றில் கலக்கும் உயர் உலோகக் கழிவுகள், பூச்சிக்கொல்லி, மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ் டிக் கழிவுகள் ஆகியவற்றால் காவிரி ஆறு மாசுபடு வதை தடுக்கும் பொருட்டு அய்.அய்.டி. நிபுணர் குழு மற்றும் பல்வேறு வல் லுனர்களின் ஆலோ சனைகளை கேட்டுப் பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment