சென்னை - 600012, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் டாக்டர் கலைஞர் கருணாநிதி பூங்கா அமைந்துள்ளது. பூங்காவின் உள்ளே பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் முழு உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் சிலை எதிரே ஒரு டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. அங்கு வரும் குடிமகன்கள் மதுவை வாங்கிவந்து சிலை பீடத்தின் கீழே வைத்து அருந்துகின்றனர். P1 காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள பெரியாரின் சிலையை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் குடிமகன்களை தடுத்து நிறுத்தி இந்த வழியைப் பயன்படுத்தும் பெண்கள் மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பு ஏற்படுத்திதர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
மு.தட்சிணாமூர்த்தி
கன்னிகாபுரம், சென்னை
No comments:
Post a Comment