ரோம், அக். 11- இத்தாலியின் ரோம் நகரில் கரோனா தடுப்பு நடவடிக் கையின் ஒரு பகுதியாக, பணியிடங்களில் கரோனா ஹெல்த் பாஸ் என்ற திட்டம் (சுகாதார அட்டை) அமலில் உள்ளது. தற் போது மருத்துவப் பணியாளர் களுக்கு மட்டும் இது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, கரோனா தடுப்பூசி சான்றிதழ், கரோனா பாதிப்பி லிருந்து மீண்டதற்கான ஆதாரம் அல்லது சமீபத்திய கரோனா பரி சோதனை முடிவை வழங்க வேண் டும்.
கரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி இருப் பதை உறுதி செய்யும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
தற்போது இந்த ஹெல்த் பாஸ் திட்டம் அக்டோபர் 15ஆம் தேதி முதல் அனைத்து பணியிடங்களி லும் கட்டாயம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஹெல்த் பாஸ் இல் லாத தொழிலாளர்கள் ஊதியம் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்படு வார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப் பாக தீவிர வலதுசாரி குழுவினர் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
அனைத்து பணியிடங்களிலும் ஹெல்த் பாஸ் கட்டாயம் என்பதை ஏற்க முடியாது எனக் கூறி ரோம் நகரில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் காவல்துறையின ருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காவல்துறையினரின் அறிவுறுத் தல் மற்றும் எச்சரிக்கையை மீறி ஒரு குழுவினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர். அவர் களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். எனினும் போராட்டக் காரர்கள் பின்வாங்கவில்லை. எனவே, அவர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி யும் விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட் டது. இதேபோல் மிலன், செசினா உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment