தூத்துக்குடி, அக்.11 தூத்துக்குடி யில் வ.உ.சி.யின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மினி மாரத் தான் போட்டி 9.10.2021 அன்று நடந்தது. வ.உ.சி. கல்லூரி சார்பில் நடந்த இந்த போட்டியை மக்க ளவை உறுப்பினர் கனிமொழி மற்றும் சமூக நலன், மகளிர் உரி மைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசுகையில், முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், கப்ப லோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 150-ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள் ளார். அதன் அடிப்படையில், வ.உ.சி. பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக மாணவ-மாணவிகளுக்கு மினி மாரத்தான் போட்டி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது என்றார்.
இதைத்தொடர்ந்து, மாணவ-மாணவிகள் மாரத்தான் ஓட் டத்தை தொடங்கினர். இதில், தூத்துக்குடி, தென்காசி, கன்னியா குமரி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1,700 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் மக்களவை உறுப்பினர் கனிமொழி அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
மேலும் மக்களவை உறுப்பினர் கனிமொழி மினி மாரத்தான் போட்டியில் காலில் காலணி அணியாமல் ஓடிய தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த 14 மாணவ-மாணவிகளை கடைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு காலணி வாங்கி கொடுத்தார்.
தங்களுக்கு தேவையான கால ணிகளை உடனடியாக வாங்கி கொடுத்த மக்களவை உறுப்பினர் கனிமொழிக்கு மாணவிகள் உருக் கமாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment