திருநெல்வேலி,அக்.2- திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சமூகவியல் துறையின் சமூக விலக்கல் மற் றும் உட்கொணர்வு ஆய்வு மய்யம் சார்பில் உரைத் தொடர் நேற்று (1.10.2021) காலை 11 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் சுந்தரனார் அரங்கத்தில் நடைபெற்றது.
பெரியாரும் பெண்கள் உரிமைகளும் தலைப்பில் உரைத்தொடரை தொடக்கி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி வாயிலாக உரையாற்றினார். கவிஞர் அறிவுமதி முதல் உரைத்தொடர் உரையாற்றினார்.
தமிழர் தலைவர்
பெண்ணியம் குறித்து பேசுகிறபோது இந்திய சமூகவியலில் பெரியார் ஏனையோரி டமிருந்து மாறுபடுகிறார். பெரியாருக்கு முன்னால் பாரதி பேசியும் எழுதியுமிருக்கிறார் அவர் பேசி எழுதியது அல்லது காண விரும்பியது புதுமைப்பெண். இங்கே பெரியார் பேசி, எழுதியது புரட்சிப்பெண். பெண்ணுரிமைக்கு எதெல்லாம் தடையாக இருக்கிறதோ அதையெல்லாம் கடுமையாக பெரியார் எதிர்த்தார். கடவுள், மதம் மற்றும் புராணப் புளுகுகளை அம்பலப்படுத்தி பெரியார் எழுதிய நூல்களை மேற்கோள் காட்டி குறைவான நேரத்தில் மிக எளிமையாக நீண்ட வரலாற்று பின்னணியோடு ஒரு ஆய்வரங்க நிகழ்வில் அறிவுலகம் ஆசிரியர் அய்யா என்று வாஞ்சையோடு அழைக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் காணொலியில் உரை நிகழ்த்தினார்.
பாவலர் அறிவுமதி
நிகழ்வில் திரைப்பட பாடலாசிரியர் பாவலர் அறிவுமதி நேரடியாக கலந்து கொண்டு தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள்? நூல் குறித்த செய்தி களையும், சோதிட புரட்டை புறந்தள்ளி சோதிடத்தை இகழ்ந்து மன்னன் எவ்வாறு வெற்றி கொண்டான் என்கிற செய்திகள் உட்பட பல்வேறு தகவல்களையும் சங்க இலக்கியத்தில் காணப்படும் பாடல் தரவுகளோடு உரையாற்றினார்.
வினாக்களும் விடைகளும் இல்லாத அரங்கம் வெற்றுடல் போலாகாதா? வினாக் களை பார்வையாளர்களும் விடையினை பாவலரும் பரிமாறிக் கொண்ட விதம் நெஞ்சில் நிலைத்திருக்கும் ரகம். ஒரு மாணவர் சற்று உணர்ச்சிவயப்பட்டு ஆதிக்கவெறி வேரோடு சாய்த்து உலகம் முழுக்க வலம் வரும் பெரியார் எங்கள் ஊர் செவிகளுக்கு எட்டவில்லையே. எங்கள் ஊருக்கும் எங்கள் மக்களோடும் பெரியாரை பேசுங்கள் என்றார். அவர் தூத்துக்குடி மாவட்டம் என்றார் நிச்சயம், காற்றுபுகாத இடத்திலும் பார்ப்பன கரையானை பதம்பார்த்த பெரியார் விரை வில் உங்கள் ஊரில் உங்கள் தலைமையில் பெரியாரை பேசுவோம் என்றார். சமூகவியல் மாணவர்கள் மட்டுமின்றி பல்வேறு துறை மாணவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வை சமூக விலக்கல் மற்றும் உட்கொணர்வு ஆய்வு மய்ய இயக்குநர் பேராசிரியர்சாமுவேல் ஆசீர்ராஜ் ஒருங் கிணைத்து வரவேற்றார். நிகழ்வில் பேரா சிரியர் அனிதா, பேராசிரியர் பிரபாகர் மற்றும் திராவிடர் கழக நெல்லை மாவட்டத் தலைவர் இரா.காசி, தென்காசி மாவட்டத் தலைவர் த.வீரன், கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண் டனர். பேராசிரியர் அலர்மேலுமங்கை நன்றி யுரையில் நிகழ்வு நிறைவடைந்தது.
-சு.நயினார், நெல்லை.
No comments:
Post a Comment