மயிலை சீனி. வேங்கடசாமி விளக்கம்
(தமிழர்கள் தீபாவளியை ஒரு ஹிந்து சமய விழா என்றும் அது தங்களுக்கே உரியதென்றும் சொந்தம் பாராட்டிக் கொண்டு ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். தந்தை பெரியார் அவர்கள் தீபாவளிக் கதையின் ஆபாசத் தன்மை களை எவ்வளவு ஆதாரபூர்வ விளக்கங் களோடு எடுத்துக் கூறினாலும், திராவிட மண்ணை ஆரியர் வென்றதன் நினைவு நாள் கொண்டாட்ட விழாவே தீபாவளி; அதைத் தமிழின மக்கள் கொண்டாடுவது இழிவு அல்லவா? என்று விளக்கினாலும், மக்கள் தெளிந்த பாடில்லை. நம் அறிவுப் பிரச்சாரத்திற்கு ஆதரவாக மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் கருத்துரை அமைந்துள்ளது.
பழங்கால இலக்கியச் சான்றுகள், கல் வெட்டு ஆராய்ச்சிக் குறிப்புகளின் துணை கொண்டு அவர் எழுதியுள்ள கருத்து).
தீபாவளி
இது சமணரிடமிருந்து ஹிந்துக்கள் இரவல் கொண்ட விழா. கடைசி தீர்த்தங்கர ரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரத்திலே அவ்வூர் அரசருடைய அரண் மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமியிருந்த மக்களுக்கு அறிவுரைச் செய்தருளினார். இரவு முழுவதும் நடை பெற்ற இச்சொற்பொழிவு விடியற்காலை யில் முடிவடைந்தது.
வைகறைப்பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல் லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கிவிட்டனர். வர்த்தமான மகாவீரரும் தாம் அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்த படியே இயற்கை அடைந்தார், பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் முடிவெய்தியிருப் பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர்.
அவ்வரசன் மற்ற அரசர்களை வர வழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகிற்கு ஞானஒளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழி படும் பொருட்டு அவர் முடிவெய்திய நாளில் வீடுதோறும் அறிவொளிக்குச் சான்றாக விளக்குகளை ஏற்றுவித்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடுசெய்தான்.அது முதல் இந்த விழா தீபாவளி என்னும் பெயரால் கொண்டாடப்படுகிறது (தீபம்- விளக்கு ஆவளி - வரிசை) மகாவீரர் விடியற்காலையில் முடிவெய்தியபடியால் தீபாவளி விடியற்காலையில் கொண்டா டப்படுகிறது. விடியற்காலையில் நீராடியப் பின்னர் விளக்கேற்றி அறநெறிப் போதனை களை நினைவிருத்தி தீபாவளி விழா கொண்டாடப்படுவது வழக்கமாக இருக் கின்றதன்றோ!
சமண சமயத்தினரை வீழ்த்திய பிறகு சமணரைப் பெருவாரியாக ஹிந்துமதத்தில் சேர்த்தனர் ஆரியர். சேர்த்தபிறகும் அவர் கள் வழக்கமாகக் கொண்டாடிவந்த தீபாவ ளியை விடாமல் தொடர்ந்து கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஹிந்துக்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.
ஆனால் பொருத்தமில்லாத புராணக் கதையைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும் அவன் இறந்த நாளைக் கொண்டாடுவது தான் தீபாவளி விழா என்றும் கூறப்படுகிறது. இந்த புராணக்கதை பொருத்தமானது அன்று.
அன்றியும் நரகாசுரனை இருட்டில் சத்யபாமையின் உதவியால் போரிட்டு வென்றான் என்பது கதை! இரவில் போர் புரிவது பண்டைக் காலத்து இந்தியப்போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் மறைந்த உடனே போரை நிறுத்தி மறுநாள் சூரியன் புறப்பட்ட பிறகு தான் போரைத் தொடங்குவது பண்டைக்காலத்துப் போர் வீரர்கள் நடை முறையில் கொண்டிருந்த ¢வழக்கம். சமணர் கொண்டாடிவந்த அறி வுப்போதகரரான மகாவீரர் முடிவெய்திய திருநாளே தீபாவளி என்பதில் அய்ய மில்லை .
ஆனால் இவ்விழாவை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு ஹிந் துக்கள் இந்த விழாவின் உண்மைக் கார ணத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதையாகக் கூறப்பட்டு ஆரியப் பீரங்கிகளான புராணங்கள், பத்திரிகைகள் வாயிலாகப் பலப்பட்டு வருகிறது.
ஆதாரம்:- மயிலை சீனி.வேங்கடசாமி
அவர்கள் எழுதியுள்ள
'சமணமும் தமிழும்' என்ற நூல்.
(விடுதலை: 22.10.1965, பக்கம் 3)
No comments:
Post a Comment