விஜயநகர பேரரசுக் காலத்தில் தமிழ்நாட்டில் நுழைந்த தீபாவளி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 30, 2021

விஜயநகர பேரரசுக் காலத்தில் தமிழ்நாட்டில் நுழைந்த தீபாவளி

1. தீபாவளி தமிழ் நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத்தோடும் பருவநிலை களோடும் தொடர்பில்லாத ஒரு திரு விழாவாகும்.

2. தீபாவளியைக் குறிக்கும் வெடி அதன் மூலப்பொருளான வெடி மருந்து ஆகியவை தமிழ் நாட்டிற்கு 15 ஆம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

3. நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ் ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக இன்று பிராம ணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும்.

4. இந்த நாள் பிராமணிய மதத்தின் எதிரி யான சமண மதத்தின் 24 ஆம் தீர்த்தகாரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த (இறந்த) நாளாகும்.தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடு மாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுக் கொண்டார். ஆகவே பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
எனவே
நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபா வளிக் கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும்

5. விஜய நகரப் பேரரசான இந்து சாம் ராஜ்யம் தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. 15 ஆம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

முனைவர் தொ.பரமசிவன்

அறியப்படாத தமிழகம்நூலில்...

No comments:

Post a Comment