ஜெனீவா, அக்.2 உலகளவில் கரோனா பாதிப்பும், மரணமும் தொடர்ந்து சரிந்து வருகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கரோனா தொற்றுநோய் வாராந்திர நிலவர அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
* செப்டம்பர் 20-26 வாரத்தில் உலகமெங்கும் புதிதாக 33 லட்சம் பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 55 ஆயிரம் பேர் இந்த தொற்றால் இறந் துள்ளனர். இந்த பாதிப்பும், இறப்பும் முந்தைய வாரத் துடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் வீழ்ச்சி அடைந் துள்ளது.
* மேலும் உலகளவில் கரோனா பாதிப்பும், இறப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
* பாதிப்பை பொறுத்தமட்டில் கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகளில் அதிகபட்சமாக 17 சதவீதமும், மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் 15 சதவீதமும், வட-தென் அமெரிக்காவில் 14 சதவீதமும், தென் கிழக்கு ஆசியாவில் 10 சதவீதமும் குறைந்துள்ளது. அய்ரோப் பாவை பொறுத்தவரையில் முந்தைய வார நிலை தொடர்கிறது.
* இறப்பை பொறுத்தமட்டில் அய்ரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவை தவிர்த்து பிற பகுதிகளில் 15 சதவீதம் சரிவு காணப்பட்டுள்ளது. அதிகபட்ச சரிவு என்றால் அது மேற்கு பசிபிக் பிராந்தியத்தில்தான். அங்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 24 சதவீதம் வீழ்ச்சி காணப்பட்டுள்ளது.
* உலகளவில் இதுவரை 23 கோடியே 10 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் 47 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
* உருமாறிய வைரஸ்களில் ஆல்பா 193 நாடு களிலும், பீட்டா 142 நாடுகளிலும், காமா 96 நாடு களிலும், டெல்டா 187 நாடுகளிலும் பரவி இருக்கிறது.
* புதிய பாதிப்புகளில் அமெரிக்காவில் 7 லட்சத்து 65 ஆயிரத்து 827 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 31 சதவீதம் சரிவு.
* தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் பாதிப்பு களும், இறப்புகளும் 2 மாதங்களாக குறைந்து வருகின்றன. கடந்த வாரம் இங்கு 3 லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டது. 5,200 பேர் இறந்திருக்கிறார்கள். பாதிப்பில் 10 சதவீதமும், இறப்பில் 20 சதவீதமும் சரிந்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment