புதுடில்லி,அக்.11- ஒன்றிய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2021-2022 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் மாணவர்களும் கல்வி உத வித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
பள்ளி படிப்பு உதவித் தொகைக்கு நவம்பர் 15ஆம் தேதி வரையிலும் மேற் படிப்புக்கு நவம்பர் 30ஆம் தேதி வரையி லும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த கல்வி உத வித்தொகை இணையத்தில் ஏற்கெனவே பதிவு செய்திருக்கும் கல்வி நிறுவனங்கள் தங்களது ஆதார் விவரங்களை இணைத்து இணை யத்தில் சரிபார்த்துக் கொள்ள முடியும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள், பள்ளிகளின் குறியீட்டு எண் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதற்காக மாணவர்களுக்கு தங்களது குறியீட்டு எண்ணை வழங்க கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கல்வித் தொகை விண்ணப்பிப் பதில் சந்தேகம் இருந்தால் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல பள்ளி மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட கல்வி நிலையம் மற்றும் கல்வி அதிகாரிகள் மூலம் ஆலோ சனை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் அமைச்சரின் பாதுகாப்பிற்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு
சென்னை, அக்.11 பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தாமல் மற்ற வாகனங்களுடன் சேர்ந்தே முதல் அமைச்சர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பாது காப்பிற்காக செல்லும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், காவல்துறை இயக்குநர் ஆகியோர் அடங்கிய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தாமல் மற்ற வாகனங்களுடன் சேர்ந்தே முதல் அமைச்சர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக முதல் அமைச்சரின் பாதுகாப்பிற்காக 12 முதல் 13 வாகனங்கள் செல்லும்.
அந்த வாகனங்களில் எண்ணிக்கை தற்போது ஆறாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற வகையில் இந்த முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு
வானிலை மய்யம் தகவல்
சென்னை,அக்.11- தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழைக்கும் அடுத்த 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 36 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது அடுத்த 4,5 நாட்களில் மேலும் வலுப்பெற்று ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரகூடும் இதன் காரணமாக அடுத்த நான்கு, அய்ந்து நாட் களுக்கு அந்தமான் நிகோபார் தீவுகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும் அடுத்து வரக்கூடிய அய்ந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்:
2 இடங்களில் மட்டும் மறு வாக்குப்பதிவு
சென்னை,அக்.11- உள்ளாட்சி தேர்தலின்போது வாக்குச் சீட்டில் சின்னம் இடம் பெறாதது மற்றும் சாவடி மாறி வாக்காளர்கள் வாக்களித்தது ஆகிய காரணங்களால், இன்று (11.10.2021) 2 இடங்களில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதாரண தேர்தலும், ஏனைய 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நிரப்பப்படாத மற்றும் காலியாக உள்ள பதவியிடங்களுக்கான தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது. ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தண்டலம் கிராம ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான வாக்குச்சீட்டில் தவறான சின்னம் பதிவாகி இருந்தது.
இதனால் வாக்குச்சாவடி எண் 173-ல் மட்டும் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் 1-வது வார்டு உறுப்பினர், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த வார்டுக்கான வாக்குச்சீட்டுகள், தவறுதலாக 2-வது வார்டுக்கு வழங்கப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது.
இந்த 2-வது வார்டுக்கும் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை (12.10.2021) காலை 8 மணிக்கு எண்ணப் பட உள்ளன. மொத்தம் 74 மய்யங்களில் வாக்கு எண் ணிக்கை நடைபெறும் என, தேர்தல் ஆணையம் கூறி யுள்ளது.
No comments:
Post a Comment