தமிழ்நாட்டில் 4 லட்சத்து 80 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 11, 2021

தமிழ்நாட்டில் 4 லட்சத்து 80 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, அக்.11 இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 4 லட்சத்து 80 ஆயிரத்து 875 கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் இரவு நேரங்களில் தங்கும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செய லாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ் ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர் டாக்டர் எஸ்.மனிஷ், பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம், மாநகர நல அதி காரி டாக்டர் எம்.ஜெகதீசன் உள் ளிட்ட அதிகாரிகள் பலர் உடனி ருந்தனர்.

முகாமில் கரோனா தடுப்பூசி போட் டுக் கொண்டவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பழக் கூடைகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-

4 லட்சத்து 80 ஆயிரம் கர்ப்பிணிகள்

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆலோசனையின்படி, தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 5 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 633 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். முதல் தவணை தடுப்பூசியை 65 சதவீதம் பேரும், 2-ஆவது தவணையை 22 சதவீதம் பேரும் போட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட் சியில் இதுவரை 68 லட்சத்து 56 ஆயிரத்து 278 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 83 சதவீதம் பேர் முதல் தவணையும், 40 சதவீதம் பேர் 2ஆம் தவணையும் போட்டுள்ளனர்.

அனைத்து தரப் பினருக்கும் தடுப்பூசி என்ற அடிப் படையில் பணிகள் நடந்து வரு கின்றன. இந்தியாவி லேயே அதிகமாக 4 லட்சத்து 80 ஆயிரத்து 875 கர்ப் பிணிகளுக்கு தமிழ்நாட்டில்தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்களில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 27 பேருக்கு தடுப்பூசி போடப்பட் டுள்ளது. இந்தியாவிலேயே சென்னை மாநக ராட்சியில்தான் முதன்முறையாக மாற்றுத்திறனாளி களுக்கும், 80 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கும் நேரடியாக சென்று தடுப்பூசி போடும் வகையில் சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டு 2 லட்சத்து 31 ஆயிரத்து 515 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

70 சதவீதம் பேர்

தமிழ் நாட்டில்தான் பழங்குடியினர் அதிகம் தடுப்பூசி போட்டு உள்ளனர். நீலகிரியில் 100 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். அதேபோல சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள் ளிட்ட மாவட்டங்களி லும் பழங்குடியினர் அதிக அளவில் தடுப்பூசி போட்டுக் கொண் டனர். தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து பல்வேறு வகை களில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத் தப்பட்டு வரு கின்றன. இதுவரை இல் லாத வகையில் அதிகம் பேர் பயன் பெறும் வகையில்   மெகா தடுப் பூசிமுகாம்கள் இருக்கும். 

தமிழ் நாட்டில் தடுப்பூசி போட் டவர்களின் எண்ணிக் கையை 70 சதவீ தமாக விரைவில் உயர்த்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment