விவசாயிகள் படுகொலையில் மோடி மவுனம் காப்பது ஏன்? ராகுல் காந்தி கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 11, 2021

விவசாயிகள் படுகொலையில் மோடி மவுனம் காப்பது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

புதுடில்லி,அக்.11- பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் உத்தரபிரதேசத்தில் நடந்த விவசாயிகள் படுகொலை உள்ளிட்ட விவகாரங்களில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக  அனைத்து தரப்பிலிருந்தும் கண்ட னங்கள் வெடித்துள்ளன. ஆனால், அவை குறித்து பிரதமர் மோடி பதி லேதும் கூறாமல் அமைதி காத்து வருகிறார்.

காங்கிரசு கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

பிரதமர் மவுனம் - அதிகரிக்கும் பணவீக்கம், பெட்ரோல்-டீசல் விலை கள், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் மற்றும் பாரதீய ஜனதா தொண்டர்கள் படுகொலை.

பிரதமர் பெருஞ்சினம்- கேமரா மற்றும் புகைப்படம் இல்லாமை, உண் மையான விமர்சனங்கள் மற்றும் நண் பர்கள் பற்றிய கேள்விகள்என குறிப் பிட்டிருந்தார்.

மேலும், கிழக்கு லடாக் பகுதியில் சீனா பெரிய அளவிலான ராணுவ கட்டமைப்பை செய்திருப்பதாக ராணுவ தளபதி எம்.எம்.நரவனே கூறியதை மேற்கோள்காட்டி ராகுல் காந்தி டிவிட்டர் பதிவில், ‘‘இந்திய மண்ணில் சீனர்கள் தங்கப்போகிறார்களா?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment