மும்பையைத் தலைமையகமாக கொண்ட யூனியன் வங்கி தலைமை அதிகாரி கே.ராகவேந்திரா என்பவர் 1.10.2021 அன்று இந்தியாவில் உள்ள அனைத்து யூனியன் வங்கி கிளைகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார், அதில் நவராத்திரி 9 நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நமது அலு வலகர்கள், ஒப்பந்த அலுவலகர்கள், அலுவல் தொடர்பான இதர பணியாளர்கள் அனைவரும் நவராத்திரி 9 நாள்களில், 9 பெண் தெய்வங்கள் அணியும் வண்ணத்தில் ஆடைகளை அணிந்து வரவேண்டும்.
ஆடை குறித்த அட்டவணைகளைக் கீழே கொடுத்துள்ளோம்
அப்படி அணிந்து வராதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
கலர் சரியாக உள்ளதா என்று சோதனை செய்யப்படும்.
அனைவரும் தினசரி மாலை குழு போட்டோக்களை எடுத்து அனுப்பவேண்டும்
14.10.2021 அன்று அலுவலகத்தில் நவராத்திரிவிழாவை சிறப்பாக கொண்டாடவிருக்கிறோம். அன்றைய தினம் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது. அன்று எந்த ஒரு அலுவல் நிகழ்ச்சியும் வங்கியில் நடத்தக்கூடாது.
விதிமுறைகளுக்கு இணங்கி குறிப்பிட்ட வண்ண ஆடைகளை அணிந்துவந்து ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நவராத்திரி ஆடை அறிக்கையைத்
திரும்பப் பெற்ற யூனியன் வங்கி
எதிர்ப்புகள் காரணமாக நவராத்திரி ஆடை கட்டுப்பாட்டுச் சுற்றறிக்கையை யூனியன் வங்கி திரும்பப் பெற்றுள்ளது. யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் பொது மேலாளர், நவராத்திரியின் ஒன்பது நாள்களும் தங்களின் ஊழியர்கள் அனைவரும் ஒன்பது நிற உடைகளில் வர வேண்டுமெனச் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். சுற்றறிக்கையைப் பின்பற்றி உடை அணியாதவர்கள், ரூ.200 அபராதம் செலுத்த வேண்டுமென்றும் அதில் சொல்லப்பட்டிருந்தது. இதை எதிர்த்து கண்டனங்கள் எழுந்து வந்தன. இந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து தற்போது அந்த வங்கி தனது அறிக்கையைத் திரும்பப்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment