விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் பி.எம்.டபிள்யூ. இருசக்கர வாகனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 11, 2021

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் பி.எம்.டபிள்யூ. இருசக்கர வாகனம்

மும்பை, அக். 11- பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் தனது புதிய சி400 ஜிடி இருசக்கர வாகனம் இந் தியாவில் அக்டோபர் 12 ஆம் தேதி அறி முகமாகும் என அறிவித்து இருக்கிறது. இதற்கான டீசரை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறது.

அறிமுகமானதும் இந்திய சந்தை யின் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் என்ற பெருமையை பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி பெறும். தற்போதைய தகவல் களின்படி பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி மாடல் வரிகள் சேர்க்கப்படாமல் இந் தியாவில் ரூ. 5 லட்சம் விலையில் விற்ப னைக்கு வரும் என தெரிகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கெனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி மாடலின் முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும். பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி மாடலில் 350 சிசி, சிங்கில் சிலிண்டர், வாட்டர் கூல்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப் படுகிறது.

இந்த என்ஜின் 34 பி.எச்.பி. திறன், 35 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையை வெளிப்படுத்தும். புதிய பி.எம்.டபிள்யூ. இருசக்கர வாகனம் மணிக்கு அதிகபட்சம் 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டு உள்ளது.

No comments:

Post a Comment