ஏழுமலையானுக்கே பட்டை நாமமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 2, 2021

ஏழுமலையானுக்கே பட்டை நாமமா?

திருப்பதி கோயில் கட்டணச்சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை  : 6 பேர்மீது வழக்கு

திருமலை,அக்.2- திருப்பதி கோயிலில் ரூ.300 மதிப்பிலான கட் டண சீட்டு கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர் பாக தேவஸ்தான ஊழியர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.300 சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டு 5 ஆயிரம் வீதம், 7 நுழைவுச் சீட்டுகள் ரூ.35 ஆயிரத்திற்கு பக் தர்களுக்கு விற்றதாக திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர், வங்கி ஊழியர் உட்பட 6 பேர் மீது திருமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது தினமும் சுமார் 22 ஆயிரம் பக்தர்கள்   வருகின்றனர். இதில் 8 ஆயிரம் பேர் ரூ.300 சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொண்ட பக்தர்களாவர். மேலும் 8 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் சர்வ தரிசன டோக்கன்களை முன்பதிவு செய்துகொண்டவர்கள். இது தவிர, விஅய்பி பிரேக், சிறீவாணி அறக்கட்டளை நுழைவுச் சீட்டு மற்றும் பரிந்துரை பேரில் ரூ.300 நுழைவுச் சீட்டுகளை பெற்றுசுபதம்வழியாக விரைவாக தரிசனம் செய்யும் பக்தர்கள் 6 ஆயிரம் பேர் உள்ளனர்.

இந்த நுழைவுச் சீட்டுகள் அறங்காவலர் குழு தலைவர், மற்றும் அறங்காவலர் குழு உறுப் பினர்கள் சிபாரிசின் பேரில் வழங்கப்படுகிறது. விஅய்பி பிரேக் தரிசனம் என்றால் ஒரு நாள் திரு மலையில் தங்க வேண்டியுள்ளது. ஆனால், இந்த சுபதம் வழியாக தரிசனம் என்றால், வெறும் அரை மணி நேரத்தில் சுவாமியை தரிசித்து விட்டு வெளியே வந்து விடலாம். இதன் காரணமாக தற்போதைய புரட்டாசி மாதத்தில் சுபதம் நுழைவுச் சீட்டுகள் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படு கிறது.

இதனை அறிந்த தேவஸ்தான கண்காணிப்பு பிரிவினர், இடைத் தரகர்களை கைது செய்ய தீர்மானித்தனர். அதன்பேரில், சுபதம் வழியாக தரிசன நுழைவுச் சீட்டுகள் கொண்டு வருவோரில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் உள்ளவர்களிடம் விசா ரணை நடத்தினர். இதில், கடந்த 23-ம் தேதி வெளியூரிலிருந்து வந்த பக்தர்களுக்கு ரூ.300 டிக்கெட்டை ஒரு நுழைவுச் சீட்டு ரூ.5000 வீதம் 7 நுழைவுச் சீட்டுகள் ரூ.35 ஆயி ரத்திற்கு தேவஸ்தான ஊழியர் மூலமாக வங்கி ஊழியர் ஒருவர் பக்தர்களுக்கு விற்று உள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய விஜிலென்ஸ் பிரிவினர் மொத்தம் 6 பேர் மீது நேற்றுமுன் தினம் (30.9.2021) வழக்கு பதிவு செய்தனர்.

இதுபோன்று, மேலும் பல நுழைவுச் சீட்டுகள் கள்ளச் சந்தையில் விற்றிருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். இதனால் மேலும் பல தேவஸ்தான ஊழியர்கள், இடைத்தரகர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

No comments:

Post a Comment