சென்னை,அக்.3- தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த 53 மருத்துவப் பணியாளர்களின் வாரி சுகளுக்கு கருணை அடிப் படையில் பணி வழங் கப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பொது சுகா தாரம் மற்றும் நோய்த் தடுப்புமருந்துத் துறை இணை இயக்குநர் சு.தாமரைச் செல்வம், மாவட்ட சுகாதார அலு வலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்,
‘‘கரோனா தொற் றால் உயிரிழந்த பல் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மருத் துவர்கள், செவிலியர்கள், சுகா தாரப் பணியாளர்கள் உட்பட 53 பேரின் குடும் பத்தினருக்கு கருணை அடிப் படையில் அரசுப் பணி வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பாக சம் பந்தப்பட்ட நபர்களிடம் முன் மொழிதல் கடிதம், சான்றிதழ், ஆவணம் பெற்று பொது சுகாதாரத் துறைக்கு அனுப்ப வேண் டும். இந்த பணிகள் முதல மைச்சரின் ஆய்வு வரம் புக்கு உட்ப டதால் துரித நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்’’ என்று கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment