பிரதமர் மோடியின் நண்பர் அதானி இந்தியாவின் 2ஆவது பணக்காரர் - ஒரு நாள் வருமானம் ரூ.1,000 கோடியாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 3, 2021

பிரதமர் மோடியின் நண்பர் அதானி இந்தியாவின் 2ஆவது பணக்காரர் - ஒரு நாள் வருமானம் ரூ.1,000 கோடியாம்!

மும்பை,அக்.3 நாடாளுமன்றத் துக்கு 2014ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின்போது அதானிக்கு சொந்தமான விமானங்களிலேயே மோடி பறந்து பறந்து பரப்புரை மேற்கொண்டார்.

தற்பொழுது பிரதமர் மோடி யின் நண்பரான அதானி கடந்த ஆண்டில் நாளொன்றுக்கு ரூ.1,000 கோடி வருமானம் ஈட் டியுள்ளார் என்று அய்அய் எஃப்எல் நிறுவனம் தெரிவித் துள்ளது.

அய்அய்எஃப்எல் நிறுவனம் 2021ஆம் ஆண்டுக்கான இந்திய பெரும் பணக்காரர்களின் பட் டியலை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.7.18 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக முகேஷ் அம்பானி குடும்பம் முதல் இடம் பிடித்துள் ளது. சென்ற ஆண்டில் நாளொன் றுக்கு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் ரூ.163 கோடி அளவில் வருமானம் ஈட்டியுள்ளது.

கவுதம் அதானி குடும்பம்ரூ.5.05 லட்சம் கோடி சொத்து மதிப் புடன் 2ஆம் இடம் பிடித்துள்ளது. நாளொன்றுக்கு ரூ.1,000 கோடி  அளவில் அவருடைய குடும்பம் வருமானம் ஈட்டியுள்ளது.

அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.1.40 லட்சம் கோடி சொத்து மதிப்பைக்கொண்டு இந்தியக் பெரும் பணக்காரர்களின் பட்டி யலில் நான்காவது இடத்தில் அதானி இருந்தார்.

இந்நிலையில் அவருடைய சொத்து மதிப்பு ரூ.5.05 லட்சம் கோடியாக உயர்ந்து 2ஆம் இடத் துக்கு முன்னேறியுள்ளார்.

மூன்றாவது இடத்தில் சிவ் நாடார் குடும்பம் உள்ளது. சென்ற ஆண்டில் சிவ் நாடார் குடும்பத்தின் சொத்து மதிப்பு 67 சதவீதம் உயர்ந்து ரூ.2.36 லட்சம் கோடியாக உள்ளது. நாளொன் றுக்கு ரூ.260 கோடி அளவில் வருமானம் ஈட்டி யுள்ளனர்.

எஸ்.பி. இந்துஜா குடும்பம் 4ஆவதுஇடத்தில் உள்ளது. அவர் களது வருமானம் சென்ற ஆண்டு நாளொன்றுக்கு ரூ.209 கோடி யாக இருந்துள்ளது. அவர்களது சொத்து மதிப்பு 53விழுக்காடு அதிகரித்து ரூ.2.20 லட்சம் கோடியாக உள்ளது.

5ஆவதுஇடம் பிடித்துள்ள எல் என் மிட்டல் குடும்பம், சென்ற ஆண்டில் நாளொன்றுக்கு ரூ.312 கோடி வருமானம் ஈட்டி யுள்ளது.

அவர்களின் சொத்து மதிப்பு 187 சதவீதம் உயர்ந்து ரூ.1.7 லட்சம் கோடியாக உள்ளது

No comments:

Post a Comment