புதுடில்லி, அக்.2 கடந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும் சிறுவர்களுக்கு எதிராக 350-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்து உள்ளன.
குழந்தைகளுக்கான உரிமை மற்றும் நீங்கள் என்ற அமைப்பு, இந்தியாவில் கடந்த ஆண்டில் சிறுவர் களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர் பாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் ஆய்வு செய் துள்ளது. இதில், கடந்த ஆண்டு 1,28,531 குற்றங்கள் சிறுவர்களுக்கு எதிராக பதிவாகி இருப்பது கண்டறி யப்பட்டு உள்ளது. அந்த வகையில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 350-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்து உள்ளன.
கரோனா முதல் அலை உச்சத்தில் இருந்த கால கட்டத்திலும் இந்த குற்றங்கள் அதிக அளவில் நடந் திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தை திருமணம் 50 சதவீதம் அளவுக்கும், இணையதள அத்துமீறல் வழக்குகள் 400 சதவீதம் அளவுக்கும் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
மாநிலங்கள் நிலவரத்தை பொறுத்தவரை மத்திய பிரதேசம் (13.2 சதவீதம்), உத்தரப்பிரதேசம் (11.8 சதவீதம்), மராட்டியம் (11.1 சதவீதம்), மேற்கு வங் காளம் (7.9 சதவீதம்), பீகார் (5.1 சதவீதம்) ஆகிய
5 மாநிலங்கள் மட்டுமே மொத்த வழக்குகளில் சுமார் 50 சதவீதத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
காட்டாட்சியின் பிடியில் உத்தரப்பிரதேசம்
பிரியங்கா காந்தி தாக்கு
லக்னோ,அக்.2- உத்தரப்பிரதேசத்தின் கோரக் பூரில் உள்ள விடுதி ஒன்றில் காவல்துறையினர் சமீபத் தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கே தங்கியிருந்த மணிஷ் குப்தா (வயது 36) என்ற வியா பாரியிடம் விசாரணை நடத்தியபோது அவரை காவல் துறையினர் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவர் உயிரிழந்தார்.
மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் அவர்கள் அனைவரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சுட்டுரைத் தளத்தில், ‘கோரக்பூரில் வியாபாரி ஒருவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டு இருக்கிறார். இது மாநிலம் முழுவதும் பொதுமக் களிடையே பெருத்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
காட்டாட்சியின் பிடியில் உத்தரப்பிரதேசம் சிக்கியி ருக்கிறது. குற்றவாளிகள் மீது மென்மையாகவும், சாதாரண மக்களிடம் காட்டுமிராண்டித்தனமாகவும் காவல்துறையினர் நடந்துகொள்வது காட்டாட்சி ஆகும்’ என்று குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக அவர் காவல் துறையினரால் கொல்லப்பட்ட மணிஷ்குப்தாவின் மனைவியையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
No comments:
Post a Comment