புதுடில்லி,ஆக.31- ஒன்றிய சுகா தாரத்துறை அமைச்சகம் நேற்று (30.8.2021) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நாடு முழுவதும் புதிதாக 42 ஆயிரத்து 909 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 3,27,37,939 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 380 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் மகாராட் டிராவில் 131 பேரும் கேரளாவில் 75 பேரும் இறந்தனர். இதன்மூலம் நாடு முழுவதும் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,38,210 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந் தோர் விகிதம் 1.34 விழுக்காடு ஆக உள்ளது. 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 34,763 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,19,23,405 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு தற்போது நாடு முழுவதும் 3,76,324 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.13 விழுக்காடு ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 63,43,81,358 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment