பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வோருக்குக் கடுமையான தண்டனைகள் - சட்டத்தில் புதிய திருத்தங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 31, 2021

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வோருக்குக் கடுமையான தண்டனைகள் - சட்டத்தில் புதிய திருத்தங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் உறுதி

சென்னை,ஆக.31- சட்டமன்றத்தில் இன்று (31.8.2021)  சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அளித்த பதிலுரையில் குறிப்பிட்டதாவது,

இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து, 29-8-2021 வரை தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர் பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை விற்பவர்கள், கடத் துபவர்கள் ஆகியோர் மீது 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டி ருக்கின்றன; 11 ஆயிரத்து 247 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிட மிருந்து 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 113 நான்கு சக்கர வாகனங்களும், 106 இரு சக்கர வாகனங் களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 பேர் குண்டர் சட்டத்திலே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்றது மற்றும் கடத்தியது தொடர்பாக 2,458 வழக்குகள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்டு, 5,793 கிலோ கஞ்சா மற்றும் இதர போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  3,413 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் 81 பேர் குண்டர் சட்டத்திலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.  போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மற்றும் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, போதைப் பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும் என்பதை பேரவைத் தலைவர் அவர்கள் மூலமாக,   உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஏற்கெனவே போதை மற்றும் மன மயக்கப் பொருட்கள் தடைச் சட்டம் 1985-இன்கீழ், நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகிலே போதைப் பொருட்கள் விற்பனை செய்வோருக்குக் கடுமையான தண்ட னைகள் வழங்க அந்தச் சட்டத்திலே புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படும்.  புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் .

காவல் துறையினரை ஊக்குவிக்க நிச்சயம் இந்த அரசு தயங்காது. இதுகுறித்து பரிசீலித்து, ஆராய்ந்து, என்னென்ன வகையிலே அவர்களுக்கு சிறப்பு செய்ய வேண் டுமோ, அதைப் பரிசீலித்து, அவர்களுக்குரிய 'ரிவார்டு' நிச்சயம் வழங்குவதற்கு நடவ டிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment