சென்னை,ஆக.31- கரோனா பரவல் தடுப்புக்கான கட்டுப்பாடுகளை செப் டம்பர் 15 வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விநா யகர் சதுர்த்தியின்பெயரால் பொது இடங்களில் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊர்வலம் நடத் தவும், மெரினாவில் சிலைகளை கரைக் கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று (30.8.2021) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் பண்டிகைக் காலங் களில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்கவும் தேவையான கட்டுப்பாடு களை தொடர்ந்து அமல்படுத்தவும் மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் ஓணம் பண்டிகையின்போது, மக்கள் அதிக அளவில் கூடி கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் வரும் செப்.15ஆம் தேதி வரை கொண் டாடப்பட உள்ள சமய விழாக்களின் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகின்றன.
தற்போதுள்ள கரோனா பரவல் சூழலில் சமய விழாக்களை முன்னிட்டு மத சார்பான ஊர்வலங்கள், திரு விழாக்கள் நடத்த தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தியின்போது பொது இடங்களில் சிலைகளை நிறு வுவது மற்றும் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சிலை ஊர்வலம், நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் அனுமதி இல்லை. பொது மக்கள் சமய விழாக்களை தங்கள் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி தொடர்பாக தனிநபர்கள் தங்கள் இல்லங்களில் சிறிய சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபர்களாக சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
இந்த அனுமதி தனிநபர்களுக்கு மட்டும் பொருந்தும். அமைப்புகள் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடு படுவது முழுவதும் தடை செய்யப் படுகிறது.
சென்னையில், சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித் தடத்தில் சிலைகளை கரைக்க முற்றி லும் தடை விதிக்கப்படுகிறது.
தனிநபர்கள் தங்கள் இல்லங்களில் வழிபட்ட சிலைகளை கோயில்களில் வெளிப்புறம், சுற்றுப்புறத்தில் வைக்க லாம். சிலைகளை பின்னர் முறையாக அகற்ற அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்கும்.
இந்த அனுமதி தனிநபர்களுக்கு மட் டுமே பொருந்தும் என்பதால், மீறுப வர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை, வேளாங்கண்ணி மற்றும் இதர இடங்களில் கிறிஸ்தவ சமயத் தினரால் கொண்டாடப்பட உள்ள மரியன்னையின் பிறந்த நாள் திருவிழா வில், பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
தமிழ்நாட்டில் கரோனா பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர் பாக தலைமைச் செயலகத்தில் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது. இதில் எடுக் கப்பட்ட முடிவுகள் குறித்து முதல மைச்சர் வெளியிட்ட அறிவிப்பு:
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை செப்.30ஆம் தேதி வரை தொடர்ந்து பின்பற்ற ஒன்றிய உள்துறை அமைச் சகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட் டில் தற்போது நடைமுறையில் உள்ள கரோனா பரவல் தடுப்புக்கான கட்டுப் பாடுகள் செப்.15ஆம் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்படுகிறது.
நோய்ப் பரவலை குறைக்க செப்.5 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடு வதற்கு தடை விதிக்கப்படுகிறது.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை களில் அனைத்து மத வழி பாட்டுத் தலங்களிலும் பொதுமக் களுக்கு விதிக்கப்பட்ட தடையும் திருவிழாக்கள் நடத்துவதற்கான தடையும் தொடரும்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்தந்த மாவட்டங்களில் நிலவும் நோய்ப் பரவலின் அடிப்படையில் தகுந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.
பள்ளிகள் கல்லூரிகள் இயங்கலாம்
நாளை (1.9.2021) முதல் 9, 10, 11, 12ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள் ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக அனைத்து அரசுத் துறைகளின் கட்டுப் பாட்டில் உள்ள அரசு விடுதிகள், தனியார் கல்வி நிறுவன விடுதிகள் இயங்கலாம்.
பணிபுரிபவர்களுக்கான தனியார் தங்கும் விடுதிகள் கரோனா தடுப்புக் கான நிலையான வழிமுறைகளை பின் பற்றி செயல்படலாம்.
கேரளாவில் இருந்து கல்லூரி கல்வி பயில வரும் மாணவ, மாணவிகள் தடுப் பூசி செலுத்தியிருப்பதுடன், ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றும் பெற்றி ருப்பதை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், தொழில் வர்த்தக நிறுவனத்தினர், சிறு வியாபாரிகள், வங்கி மற்றும் அரசு பணியாளர் களுக்கு சமூக பொருளாதார நடை முறைகள் தடையின்றி நடைபெற முன் னுரிமை அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி பொறுப் பாளர்கள், மருத்துவத் துறையினர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் மருத் துவ அவசர சேவைகள் மற்றும் அத் தியாவசியப் பொருட்கள் வழங் குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.
மாணவர்களின் கல்வி மற்றும் உள வியல் நலனுக்காக பள்ளிகள், கல்லூ ரிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள் ளது என்பதை பெற்றோரும் ஆசிரியர் களும் உணர்ந்து, அனைவரும் முகக் கவசம் அணிவதையும், சமூக இடை வெளியை பின்பற்றுவதையும், இதர பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்று வதையும் உறுதி செய்ய வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment