புதுச்சேரிக்கு‘மாநில தகுதி’ பெறுவதில் பாஜகவிற்கு அக்கறை இல்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 4, 2021

புதுச்சேரிக்கு‘மாநில தகுதி’ பெறுவதில் பாஜகவிற்கு அக்கறை இல்லை

முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு...

புதுச்சேரி, ஜூலை 4 புதுச்சேரிக்குமாநில தகுதிபெறுவதில் பாஜகவிற்கு அக்கறை இல்லை என்று முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து வே. நாராயண சாமி வெளியிட்டுள்ள வீடியோ செய்திக்குறிப்பு வருமாறு:

புதுச்சேரிக்கு மாநில தகுதி கிடைத்தால்தான் வளர்ச்சி காண முடியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அதிகாரிகள் ஆள்வதற்கு இடமளிக்கக் கூடாது. கடந்த 5 ஆண்டுகளில், துணை நிலை ஆளுநர் மூலம் காங்கிரஸ் கூட்டணி அரசு பட்ட தொல்லைகள் எல்லாம் மக்களுக்குத் தெரியும்.

மாநில தகுதிதான் புதுச்சேரி மக்களின் சுதந்திரத்தையும், உரிமையையும் காக்க கூடிய கவசம்.ஆனால், பிரதமரை சந்தித்த புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர், பாஜக தலைவர், அமைச்சர்கள், மற்றும் எம்எல்ஏக்கள் மாநில தகுதி தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.  மாநில தகுதி பெறுவதில் பாஜகவிற்கு அக்கறை இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

புதுச்சேரியில் தலைக்கவசம் அணியாதவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வெடிகுண்டு கலாச்சாரத்தையும், ரவுடிகள் அட்டகாசத்தையும் தடுக்கவில்லை எனில், புதுச்சேரி மக்களுக்கு நிம்மதி இருக்காது. புதுச்சேரியில் குண்டர்களையும், ரவுடிகளையும் அரசு அடக்க வேண்டும்.

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment