செந்துறை, ஜூலை 4 செந்துறை - வீராக்கன் ஆர்.ராதா, ரமேஷ் ஆகியோரின் தாயார் கோரக்குழி கழகத்தலைவர் ஆசைத்தம்பியின் மாமியார் மறைந்த வைரம் அம்மையார் நினைவேந்தல் படத்திறப்பு 29.6.2021 அன்று காலை 11 மணிக்கு வீராக்கன் கிராமத்தில் மாவட்ட கழகத் தலைவர் இரா நீலமேகம் தலைமையில்,
பொதுக்குழு உறுப்பினர் சி. காமராசு, மண்டல செயலாளர் மணிவண்ணன், மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் சு. அறிவன் வரவேற்புரையாற்றினார் .
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் அம்மையாரின் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார். மற்றும் மண்டல இளைஞரணி செயலாளர் பொன் செந்தில்குமார், மாவட்ட அமைப்பாளர் இரத்தின. ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மா.சங்கர், முத்தமிழ்ச் செல்வன், மேனாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கதிரேசன், பிச்சையம்மாள், தலைமை ஆசிரியர் (ஓய்வு) ராமானுஜம், மாணவரணி பொறுப்பாளர் திராவிட விஷ்ணு ஆகியோர் நிறைவுரை ஆற்றினர். சபாபதி நன்றி கூறினார்

No comments:
Post a Comment