டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
4இந்தியாவுடன் செய்யப்பட்ட ரபேல் போர் விமானம் கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக ஆதாரங் களுடன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் பற்றி நீதி விசாரணை நடத்த பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக,
தனி நீதிபதியும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
4நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவிற்கு எதிராக விளம்பர நோக்கில் பா.ஜ.க. வழக்கு தொடுத்துள்ளது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. குழு
அரசுக்கு அறிக்கை அளிக்காத நிலையில், மனுதாரர் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் அதை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment