தலைவாசல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை உயர்த்தப்படும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 4, 2021

தலைவாசல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை உயர்த்தப்படும்

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தகவல்!

ஆத்தூர், ஜூலை 4- தலைவாசல் அருகே செயல்படும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை 80 ஆக உயர்த்தப்படும் என மீன் வளம் மற்றும் கால்நடை பரா மரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் தெரிவித் தார். தலை வாசல் கால்நடை பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிலை யத்தை தமிழ் நாடு மீன்வளம் மற் றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன் பார்வையிட்டபின் செய்தியாளர் களிடம் கூறியதா வது:- பல்லுயிர்ப் பெருக்கம், வெளி நாட்டு மாணவர் சேர்க்கை, ஆய்வாளர்கள் தங்கும் வசதி என அனைத்துப் பணிகளும், ஓராண் டுக்குள் முழு அளவில் முடிந்து பயன்பாட்டுக்கு வரும். இங்கு செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் 40 மாணவர்கள் நிகழாண்டு கல்வி பயின்று வருகின்றனர். அடுத்த கல்வியாண்டில் இந்த எண் ணிக்கை 80 ஆக உயர்த்தப்படும். மீன் வளத்தில் தமிழ்நாடு முதலி டத்தில் இருந்த நிலை மாறி தற் போது 5 ஆம் இடத்தில் உள்ளது. மீண்டும் முதலிடத்தைப் பிடிக் கும் வகையிலான நடவடிக்கைகள் அரசு தரப்பில் எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment