சென்னை கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்கத் திட்டம் : அமைச்சர் கே.என்.நேரு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 22, 2021

சென்னை கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்கத் திட்டம் : அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை, ஜூலை 22 சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால் வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், கரைகளை பலப்படுத்தி பராமரிக்கவும் ரூ.2,500 கோடியில் திட்டம் தீட்டப்பட் டுள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித் துள்ளார்.

கோவை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் மாநகராட்சிகள், நகராட் சிகள், பேரூராட்சிகள் மற்றும் தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத் தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று (21.7.2021) நடைபெற்றது. 

கூட்டத்துக்குப்பின் அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:  ஜல்ஜீவன் மிஷன்திட்டத்தின்கீழ், கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயில் கழிவுநீர் கலக்கும் 330 இடங்கள் கண்டறியப் பட்டு, அந்த கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் கால்வாயில் விடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் கால்வாய்களின் கரைகளை பலப் படுத்தி மரங்களை நட்டு பராமரிக் கும் திட்டம் ரூ.2,500 கோடி யில் தீட்டப் பட்டுள்ளது. ஒன்றிய அரசிடம் நிதி பெற்று, குடிநீரை நல்ல முறையில் வழங்குவதுடன், மழைநீர் தேங்காமலும் நடவடிக்கை எடுக்கப் படும். சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தை முதல்வர்  அமைச்சர் உருவாக்கி யுள்ளார். பக்கிங்காம், கூவம், அடையாறு நீரை சுத்தப்படுத்தி கொசு இல்லாமல் செய்வது முதல் பணியாகும். வீடுகளுக்கு குடிநீர் வழங்குவது 2-ஆவது திட்டப் பணியாகும். திட்டப் பணிகளை சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் அறிவிப்பார் என்றார்.

No comments:

Post a Comment